OPS: 2 assembly seat + ரவீந்திரநாத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட்? திமுகவிடம் ஓபிஎஸ் டிமாண்ட்? டீல் ஓகே?
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகரின் அறையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் (OPS) அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திமுகவில் இணைய ஓபிஎஸ் சில டிமாண்ட்களை வைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு திமுகவும் ஒப்புக் கொண்டுவிட்டதாம்.
அரசியலில் தனித்துவிடப்பட்டவர் ஓபிஎஸ். முடிவு எடுக்க தாமதமாகி ஒவ்வொரு ஆதரவாளர்களாக விலகிவிட்டனர். தற்போது ஓபிஎஸ்ஸுடன் இருக்கும் முக்கியமானவர்கள் என பார்த்தால் அவர்கள் எம்எல்ஏ அய்யப்பனும் வெல்லமண்டி நடராஜனும்தான்.

இருவரில் ஐயப்பன் தவெகவில் இணைவதாக தகவல் வெளியான போதே அவர் அதை மறுத்தார். மேலும் கடைசிவரை ஓபிஎஸ்ஸுடன் இருப்பேன், அவரது முடிவுக்கு கட்டுப்படுவேன் என தெரிவித்திருந்தார்.
வெல்லமண்டி நடராஜன்
அது போல் வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த போதே அவரும் இணைவார் என பேசப்பட்டது. ஆனால் இதுநாள் வரை வெல்லமண்டி நடராஜன் அண்ணா அறிவாயலம் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
ஆதரவாளர்கள்
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட இருக்கும் ஓரிரு ஆதரவாளர்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும், தனது மகனின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடக் கூடாது என்றால் புத்திசாலித்தனமாக முடிவு எடுக்கும் கட்டாயம் ஓபிஎஸ்ஸுக்கு எழுந்துள்ளது.
நிலைப்பாடு
இதனால் அவருடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் நேற்றைய தினம் சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த பிறகு சபாநாயகர் அப்பாவு அறையில் ஓபிஎஸ்ஸும் சேகர்பாபுவும் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
15 நிமிடங்கள்
சுமார் 15 நிமிடங்கள் நடத்தப்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் என்னென்ன பேசப்பட்டது என்ற தகவல் கிடைத்துள்ளது. மற்ற கட்சிகளில் அதிருப்தியில் இருப்போரை வலை போட்டு திமுக பிடிக்கிறது. அந்த வகையில் செங்கோட்டையனை தூக்க நினைத்து அவரிடமும் சேகர்பாபு பேசியதாக சொல்லப்பட்ட நிலையில் அவரோ தவெகவுக்குச் சென்றுவிட்டார்.
பேச்சுவார்த்தை
அது போல் ஓபிஎஸ்ஸையும் ஒன்று கூட்டணியில் சேர்ப்பது அல்லது திமுகவில் ஓபிஎஸ்ஸையே சேர்ப்பது என்ற முயற்சியை திமுக எடுத்து வருகிறது. இதற்கு சேகர்பாபுதான் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என சொல்லப்படுகிறது.
திமுகவிடம் ஓபிஎஸ் டிமாண்ட்
இந்த நிலையில் திமுகவிடம் ஓபிஎஸ் டிமாண்ட் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் தனது ஆதரவாளர்களுடன் திமுகவுக்கு வரவேண்டும் என்றால் எம்எல்ஏ ஐயப்பன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோருக்கு இரு சீட்டுகளும், மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா எம்பி சீட்டும் வழங்குமாறு கேட்டாராம்.
தென் மாவட்டங்களில் செல்வாக்கு
தென் மாவட்டங்களில் திமுகவின் பலத்தை கூட்ட ஓபிஎஸ் இணைந்தால் அவரது செல்வாக்கால் தென் மண்டலத்தை திமுகவின் கோட்டையாக்கலாம் என்ற திட்டத்தில் ஓபிஎஸ்ஸின் கோரிக்கைகளுக்கு ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications