Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவில் இணையும் வெல்லமண்டி நடராஜன்.. திருச்சியின் முக்கிய புள்ளி.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இன்று திமுகவில் இணைகிறார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜன், 2022ல் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது திமுகவில் இணைகிறார்.

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சமயத்தில் வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் ஆதரவாளராகத் திகழ்ந்தார்.

vellamandi natarajan aiadmk dmk

இதனால், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்தார். ஓபிஎஸ், அதிமுக ஒன்றிணைப்பு குழுவை தொடங்கி நடத்தி வரும் நிலையில் அதன் முக்கிய நிர்வாகியாகச் செயல்பட்டு வந்தார். திருச்சியில் ஓபிஎஸ் நடத்திய மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்களில் வெல்லமண்டி நடராஜன் முக்கியமானவர்.

இந்த நிலையில் வைத்திலிங்கம் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். வெல்லமண்டி நடராஜன் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ள இருக்கிறார். இவர்களுடன் குன்னம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரனும் இன்று திமுகவில் இணைகிறார்.

வெல்லமண்டி நடராஜன்

தொடக்கம் முதலே அதிமுகவில் பணியாற்றி வருபவர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவராக இருந்தார். பின்னர் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தார். 2016 ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன் மகனுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என வெல்லமண்டி நடராஜன் பலமுறை கட்சித் தலைமையை நாடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு பச்சைக்கொடி காட்டவில்லை. வெல்லமண்டி நடராஜனுக்கு மட்டும் சீட் வழங்கப்பட்டது. எனினும், அவர் 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார்.

2022ல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசமியால் நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்தார். ஓபிஎஸ் அணியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகச் செயல்பட்டார். இந்நிலையில் தற்போது திமுகவில் இணைகிறார் வெல்லமண்டி நடராஜன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+