ஓபிஎஸ் பின்னாடி போ.. ‘மத்தது’ தானா நடக்கும்.. 'அம்மா போட்ட உத்தரவு’ - ஈபிஎஸ் டீமை அலறவிடும் மருது!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் 'நமது அம்மா' நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமியையும் அவரது டெல்லி பயணத்தையும் விமர்சித்துள்ளார்.
அதிமுக நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ், ஈபிஎஸ் டீமை கடுமையாக விளாசி வருகிறார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தையும், அதிமுகவை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு பதிவை இட்டிருக்கிறார் மருது அழகுராஜ்.
அதில், பேச்சுவழக்கில் பதிவிட்டுள்ள மருது அழகுராஜ், டெண்டரா தொண்டரா-ன்னு ஒரு கை பார்க்க வேண்டியதான் மாப்ளேய். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் எடப்பாடி பணத்தை இப்படை வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடியின் டெல்லி பயணம்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று இரவு விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். மேலும் பல முக்கிய புள்ளிகளையும் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் ஈபிஎஸ்ஸின் டெல்லி பயணத்தை விமர்சித்துள்ளார்.

டெல்லிக்கு கூப்பிட்டு திட்ட போறாங்களா
'அம்மா போட்ட உத்தரவு' என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தையும் விமர்சித்துள்ளார். அவரது பதிவில், "எதுக்காக அவரு டெல்லிக்கு போறாரு.. கூப்பிட்டு வச்சு திட்ட போறாங்களா இல்லை எதையாவது கொடுக்கப் போறாங்களா.. அப்படினு குழப்பத்திலேயே நடந்து வந்துக்கிட்டு இருக்கிறப்ப எதிரே ஒரு 72 வயது பெருசு வந்து நின்னுக்கிட்டு தம்பி எடப்பாடி கையில மட்டும் இந்த கட்சி சிக்கிடக்கூடாது தம்பி.. தலைவரு ரத்தம் சிந்தி வளர்த்ததுப்பான்னு கண்ணை கசக்க... அதெல்லாம் ஒன்னும் ஆகாதண்ணேன்னு நான் ஆறுதல் சொல்ல.. அப்பவும் அந்த பெருசு என்ன விடுறதா இல்ல.

தலைமுழுக வேண்டியதுதான்
உறுப்பினர் கார்டை சொக்காவோட உள்பாக்கெட்டுல இருந்து எடுத்து காட்டிக்கிட்டு, தம்பி எடப்பாடி கையில கட்சி சிக்குறதும் எலக்ட்ரிக் சுடுகாட்டு மெஷினுக்கிட்ட டெட்பாடி சிக்குறதும் ஒண்ணுதான் தம்பின்னு அந்த ஆளு விடாம பினாத்த, எனக்கு காண்டாகி அப்படி எதுவும் நடக்காது. அப்படி எடப்பாடி துட்டு தான் எங்கும் ஜெயிக்கும்னா வெக்காளி எள்ளும் தண்ணியும் எறைச்சுப்புட்டு எம்.ஜி.ஆரு புள்ளி வச்சு வரைஞ்ச கட்சிய எடப்பாடி கொள்ளி வச்சு முடிச்சாருனு தலைமுழுக வேண்டியது தான்னு கோபத்துல சொல்லிப்புட்டு வந்திட்டேன்.

பணத்த வச்சு ஆடும் ஆட்டம்
ஆனாலும் ராவெல்லாம் உறக்கம் வரல. விடியல்ல எழுந்து எம்ஜிஆர் படத்தையும் ஜெயலலிதா படத்தையும் எடுத்து வச்சு வெகுநேரம் வேண்டுனேன். எப்படியாவது கட்சியை காப்பாத்திப்புடுங்கன்னு உருகி கும்பிட்டேன். ஏன்டா உசுரோட இருக்கும் போதும் நாங்க தான் கட்சிய காப்பாத்துனோம் இப்ப செத்த பெறகும் நாங்க தான் கட்சிய காப்பாத்தனுமாக்கும். பணத்தை வச்சுக்கிட்டு ஆடுற எடப்பாடிய, ஜனத்த வச்சு உங்களால் வெரட்ட முடியாதா..?

எம்.ஜி.ஆர் - ஜெ - ஓபிஎஸ்
தொண்டர்கள திரட்டி அந்த டெண்டர் கூட்டத்தை துரத்தி அடிக்கிறத விட்டுப்புட்டு, எங்ககிட்ட வந்து நின்னு புலம்பறியே உனக்கு வெட்கமா இல்லயா.. போ ஓ.பி.எஸ் பின்னாடி போ மத்ததெல்லாம் தானா நடக்கும்னு அதட்ட அப்பதான் புரிஞ்சது அண்ணாவின் வாரிசு எம்.ஜி.ஆர்னா, எம்.ஜி.ஆரின் வாரிசு ஜெயலலிதான்னா. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு அந்த மகராசி ரெண்டு தடவை மகுடம் சூட்டி அடையாளம் காட்டுன அண்ணன் ஓ.பி.எஸ் தானே.

எடப்பாடி பணத்தை இப்படை வெல்லும்
பெறகென்ன என் புத்திக்கு உரச்சத சுத்தியிருக்கும் தொண்டர்களுக்கு எடுத்துச்சொல்லி எடப்பாடி கையிலஅண்ணா தி.மு.க வ சிக்காம காப்பாத்தியே ஆகனும்ப்போய். வெக்காளி டெண்டரா தொண்டரா-ன்னு ஒரு கை பார்க்க வேண்டியதான் மாப்ளேய். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் எடப்பாடி பணத்தை இப்படை வெல்லும்... வெற்றிவேல் வீரவேல்" எனத் தெரிவித்துள்ளார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications