OPS: திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் போனால்! தவெகவுக்கு நாங்க போவோம்! கூடலூரில் கொதிக்கும் ஆதரவாளர்கள்
ஊட்டி: ஓபிஎஸ் திமுக கூட்டணிக்குச் சென்றால் நாமெல்லாம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிடலாம் என நீலகிரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக அரசியலில் தற்போது சூடுபிடித்துள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தரப்பில் பெரிய மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் அணியினர், அவர் திமுக கூட்டணிக்கு சென்றால், அவர்கள் அனைவரும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இல் இணைந்து விடலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நீலகிரி மாவட்டம்
இந்த முடிவு, நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதித்தனர். ஓபிஎஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்தால், தங்கள் அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்க தவெக போன்ற புதிய அணியில் இணைவது நல்லது என்று பலர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணி
இதற்கு முன்பு, ஓபிஎஸ் அணியில் இருந்து பலர் விலகியுள்ளனர். உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் விலகி, தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால் ஓபிஎஸ் இதுவரை தெளிவான முடிவு எடுக்கவில்லை. சமீபத்தில் அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசியது, திமுக கூட்டணிக்கு நெருங்கி வருவதாக கருதப்படுகிறது.
திமுகவுக்கு ஆதரவு
அப்போது அவர் "திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது" என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் தரப்பு இப்போது அதிமுகவுடன் இணைவது, திமுகவுடன் கூட்டணி அமைப்பது அல்லது தனித்து போட்டியிடுவது என்பதில் குழப்பத்தில் உள்ளது. ஆனால் ஆதரவாளர்களிடையே திமுகவுக்கு சென்றால் தவெகவில் இணைவோம் என்ற மனநிலை உருவாகியுள்ளது. இது தேர்தல் களத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தலாம்.
தேர்தல் அறிவிப்பு விரைவில் வரும் நிலையில், ஓபிஎஸ் அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்பதை எதிர்பார்த்து அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன. நீலகிரியில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைந்தால் என்ன செய்ய வேண்டும்?, அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகள், எதிர்கால அரசியல் நிலைப்பாடு போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆதரவாளர்களுக்கு பிடிக்கவில்லை
திமுக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவது அவரது ஆதரவாளர்களுக்கு பிடிக்காதது ஏன் என்பது குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது, ஓபிஎஸ், எதிர்கால அரசியல் பாதை குறித்து தெளிவான அறிவிப்பு அளிக்காதது, அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, புதிய கட்சிகளின் எழுச்சி, குறிப்பாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் போன்ற காரணங்களால், ஆதரவாளர்கள் மாற்று அரசியல் தளத்தை ஆராய ஆரம்பித்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
டிடிவி தினகரனும் எதிர்ப்பு
திமுக அரசை ஓபிஎஸ் பாராட்டி பேசியதை அதிமுகவினர், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர். சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பல முறை அவமதித்த திமுகவை பாராட்டலாமா? இவரை கட்சியிலிருந்து நீக்கியது சரி என்கிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓபிஎஸ் கூறியிருந்தார், இந்த நிலையில் தை முடிந்து மாசி தொடங்கிவிட்டது. ஆனாலும் அவரால் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்காமல் குழம்பியபடியே இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது. மகனுக்கு பதவி கிடைக்க ஓபிஎஸ் எந்த எல்லைக்கும் செல்வார் என அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications