எடப்பாடி பழனிசாமியிடம் ‘பவர்’ இல்ல.. சுப்ரீம் கோர்ட் சொல்லிடுச்சே.. பாயிண்டை பிடித்த வைத்திலிங்கம்!
மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் தொடங்கும்போது அதிமுக ஓ.பன்னீர்செல்வம் கையில் இருக்கும் என ஓபிஎஸ் தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை : உச்ச நீதிமன்றம் இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நிச்சயம் அதை மக்கள் செய்வார்கள் என்றும் ஓபிஎஸ் அணி ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில், தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
அதிமுக ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முக்கிய தீர்மானங்கள்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக எனும் தொண்டர்கள் இயக்கத்தை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொன்விழா என முப்பெரும் விழாவை மார்ச் மாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. விரைவில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகள் நியமிக்கப்படவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வைத்திலிங்கம் இந்தத் தீர்மானங்களை வாசித்தார்.

நிரூபித்துக் காட்டுவோம்
தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சரும், அதிமுக ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், "ஓபிஎஸ் அணியின் பலம் என்ன என கேள்வி எழுப்புகிறார்கள். திருச்சியில் மாநாடு நடத்த வாய்ப்பு தாருங்கள். நம் பலத்தை நிரூபித்து காட்டுவோம். அதிமுக என்ற இயக்கத்தை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலைவனாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம். ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணத்திற்கு உறுதுணையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.

ஈபிஎஸ்ஸை நீதிமன்றம் ஏற்கவில்லை
இரட்டை இலை சின்னம் எடப்பாடி பக்கம் போய்விட்டது என்று ஒரு சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்கள். தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைப்பாளருக்கு தான் கிடைக்கும். உச்ச நீதிமன்றம் இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் பெயரை குறிப்பிடவில்லை. அவைத்தலைவராக உள்ள தமிழ் மகன் உசேன் முன்னின்று படிவங்களில் கையெழுத்திடலாம் என்றே உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. இதனை தொண்டர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஈபிஎஸ்ஸிடம் இருப்பது இந்த இரண்டுதான்
எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது இந்த இரண்டு தான். ஒன்று பணம், இன்னொன்று திமிர். எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனை மக்கள் நிச்சயம் செய்வார்கள். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த இளைஞர்கள் உழைக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணத்திற்கு உறுதுணையாக நாம் அனைவரும் அவர் பின்னால் இருக்க வேண்டும்." எனப் பேசினார்.

ஓபிஎஸ் கையில் இருக்கும்
இதனைத் தொடர்ந்து பேசிய ஜேசிடி பிரபாகர், "இது தொண்டர்களின் இயக்கம், ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என ஜெயலலிதா சொன்னார். தொண்டர்களை நம்பித்தான் ஜெயலலிதா அப்படி சொன்னார். தொண்டர்களை மதிக்காத இயக்கமாகத்தான் தற்போது அதிமுக இருக்கிறது. தொண்டர்களின் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே ஓபிஎஸ்ஸின் எண்ணம். மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் தொடங்கும்போது அதிமுக ஓ.பன்னீர்செல்வம் கையில் இருக்கும்.

இரட்டை இலை இல்லையே
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை துவங்குங்கள். ஓபிஎஸ் இறுதிவரை போராடுவார். அவருக்கு நாம் தோளோடு தோள் நிற்க வேண்டும். இரட்டை இலை சின்னம் இல்லையே என்ன செய்ய போகிறோம் என நீங்கள் நினைக்கலாம். கண்டிப்பாக ஓபிஎஸ் இறுதிவரை போராடுவார். இரட்டை இலை சின்னம் நமக்குக் கிடைக்கும். சர்வாதிகாரத்தை எதிர்த்து வெற்றி பெறுவார். கட்சி சட்ட விதியின்படி ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என்பதை உறுதி செய்வோம்" எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் சபதம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது நிலவும் பிரச்னைக்கு யார் காரணம் என்று தொண்டர்களுக்கு தெரியும். அந்த பெயரை உச்சரிக்கும் தகுதியைக் கூட அவர் இழந்துவிட்டார். அதிமுக சட்ட விதிகளைக் காக்கவே இரண்டாவது முறையாக தர்மயுத்தம் நடத்துகிறேன் எனச் சூளுரைத்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications