Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலைக்கு ஆகாத வெத்துவேட்டு.. இதுவே சாட்சி.. தொக்காக மாட்டிய எடப்பாடி.. போட்டுத் தாக்கிய ஓபிஎஸ் டீம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் படுகேவலமான படுதோல்வியால், எடப்பாடி ழனிசாமி வேலைக்கு ஆகாத வெத்து வேட்டு என விமர்சித்துள்ளது ஓபிஎஸ் டீம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணி அட்டாக் மோடில் அதிரடியாக களமிறங்கியுள்ளது. "இனியும் பொறுத்து இருந்தால் அதிமுகவின் அஸ்தி கூட அடுத்த தலைமுறைக்கு கிடைக்காது.. எனவே கெட் அவுட் ஈபிஎஸ்" எனத் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.

ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கையில் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துக் களமாடி வருகின்றனர்.

33 வாக்குகள் முன்னிலை

33 வாக்குகள் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் உட்பட 77 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 74.79% வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை காங்கிரஸ் 53,735 வாக்குகளும், அதிமுக 20,041 வாக்குகளும் பெற்றுள்ளன. சுமார் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

ஈபிஎஸ் அணி

ஈபிஎஸ் அணி

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி இடையே யார் வேட்பாளரை நிறுத்துவது என்ற போட்டி எழுந்தது. இரு அணிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் இரட்டை இலை முடங்கும் அபாயம் ஏற்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு பெற்றவரை வேட்பாளராக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கே இரட்டை இலை சின்னம் கிடைத்தது.

எல்லா வகையிலும் டஃப்

எல்லா வகையிலும் டஃப்

இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பிரசாரத்துக்கே போகவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவு முன்னாள் அமைச்சர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளருக்கு ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்தால் தான் எதிர்காலத்தில் அரசியல் செய்ய முடியும், மிகவும் மோசமாக தோல்வியடைந்தால் தனது ஒற்றைத் தலைமை இமேஜ் பெரிய அடி வாங்கும் என ஈபிஎஸ் உணர்ந்திருந்தால், திமுகவுக்கு 'எல்லா' வகையிலும் டஃப் கொடுத்து தேர்தல் பணியாற்றினர் ஈபிஎஸ் தரப்பினர்.

ஓபிஎஸ் டீம்

ஓபிஎஸ் டீம்


ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்பப் பெற்ற நிலையில், அமமுகவும் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று கூறி போட்டியில் இருந்து விலகியது. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது. தனக்கு பலம் மிக்க கொங்கு பகுதியில், அதுவும் ஓபிஎஸ், தினகரன் களத்தில் இல்லாத நிலையில், அதிக வாக்குகளைப் பெற வேண்டிய நெருக்கடி ஈபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டது. இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மோசமாக தோற்றால், அதை வைத்தே, எடப்பாடி பழனிசாமிக்கு வலிமை இல்லை, அவரால் அதிமுகவை வழிநடத்த முடியாது என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கும் திட்டமிட்டது ஓபிஎஸ் அணி.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

அதற்கேற்ப இன்றைய தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார். மொத்த வாக்குகளில் இன்னும் பாதி கூட எண்ணப்படாத நிலையில், இப்போதே சுமார் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார் அதிமுக வேட்பாளர். அடுத்தடுத்த சுற்றுகளில் இன்னும் இந்த வித்தியாசம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் அணியினர் தங்களது அட்டாக்கை தொடங்கியுள்ளனர்.

இரண்டும் கிடைத்தும் ஜெயிக்கலையே

இரண்டும் கிடைத்தும் ஜெயிக்கலையே

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இரட்டை இலை சின்னம், அதிகாரப்பூர்வ வேட்பாளர் என இரண்டையும் எடப்பாடி தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அளித்தும் அவரால் வெற்றி பெற முடியவில்லை என ஓபிஎஸ் தரப்பினர் சுட்டிக் காட்டுகின்றனர். ஒன்றுபட்ட அதிமுகவே வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்ற பாயிண்டை முன்வைக்கின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், தொடர் தோல்வியைச் சந்திக்கும் ஈபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.

போதுமடா சாமி

போதுமடா சாமி

"போதுமடா சாமி! எடப்பாடி முதலமைச்சராக இருந்த 2019 ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி. அதே 2019ல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் படுதோல்வி. அதனை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் படுதோல்வி. அதாவது இந்த படுதோல்விகள் அனைத்தும் எடப்பாடி முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்திய காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் இதே எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தோல்வி என்பதோடு ஆட்சியையும் இழந்தோம்.

 அதிமுகவின் அஸ்தி கூட கிடைக்காது

அதிமுகவின் அஸ்தி கூட கிடைக்காது

அதை தொடர்ந்து 2021 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வி. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் போட்டியிடவே வேட்பாளர்கள் முன்வராத பரிதாபநிலை. இப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் படுகேவலமான படு தோல்வி. ஆக வெல்லம் உருட்டி பழனிச்சாமி வேலைக்கு ஆகாத வெத்து வேட்டு என்பதற்கு இவையே சாட்சி.. இதற்கு மேலும் பொறுத்து இருந்தால்
அண்ணா திமுகவின் அஸ்தி கூட அடுத்த தலைமுறைக்கு கிடைக்காது..
எனவே ஓர் குரலாக ஒலிப்போம். கெட் அவுட் ஈபிஎஸ்" எனத் தெரிவித்துள்ளார்.

66 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

66 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் உட்பட 77 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 74.79% வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்றனர். 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிகம் பெற்று வென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+