Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடிக்கு என்ட் கார்டு..ஓபிஎஸ்-ன் மெகா ப்ளான்! டிடிவி வைத்த டிமாண்ட்..ஓகே சொன்ன விஜய்! கிளைமாக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதை விட எடப்பாடி பழனிச்சாமியை தோல்வியடைய செய்வதுதான் டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வத்தின் கணக்காக இருக்கிறது. இதற்காக தமிழக வெற்றி கழகத்துடன் டீல் பேசியிருக்கிறார் டிடிவி. தஞ்சாவூர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஓபிஎஸ் டிடிவிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்து வருவது அவர் மீதான விமர்சந்ததை அதிகரித்துள்ளது.

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல் என எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே மிஞ்சியது.

O Panneerselvam TTV Dhinakaran vijay

எடப்பாடி பழனிசாமி

இடையே ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் என அதிமுகவின் முக்கிய புள்ளிகள் எடப்பாடி முகாமால்வெளியேற்றப்பட்டனர். இதனால் அவருக்கு எதிரான அணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் அதிமுகவில் இருக்கும் சில சீனியர்களே எடப்பாடி பழனிச்சாமி மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், யார் போனாலும் இரட்டை இலை சின்னத்துக்கு தான் மரியாதை என்பதை உணர்த்தவும் 2021 சட்டமன்ற தேர்தலில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம்.

2026 சட்டமன்ற தேர்தல்

அதை நோக்கியே அவரது அரசியல் வியூகங்களும் இருக்கிறது. அதனால் தான் பாஜகவுடன் இனி கூட்டணியே இல்லை என சொல்லிவிட்டு தற்போது கூட்டணி அமைத்திருக்கிறார். மேலும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்து வரும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் பாஜகவின் திட்டமோ வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் இடையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பாஜக அதிமுகவுடன் இருந்த கட்சிகளை ஒரே கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான். குறிப்பாக முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.

ஓபிஎஸ், டிடிவி தினகரன்

ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம், அதற்காக திமுகவுடன் கூட கைகோர்க்க தயார் என சொல்லி வருகின்றனர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். அதனால் தான் தனது தொண்டர்கள் மீட்பு குழுவை கழகமாக மாற்றி இருக்கிறார். இதற்கிடையே பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை திமுகவுடன் சேரலாமா? தமிழக வெற்றிக்கழகத்துடன் சேரலாமா? என இரு கேள்விகள் மட்டுமே முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் சேரப்போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

முக்குலத்தோர் வாக்குகள்

இது ஒரு புறம் இருக்க டிடிவி தினகரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் தொடர்ந்து விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பதையே இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்துடன் முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் தொடங்கி இருக்கும் நிலையில் செங்கோட்டையனிடம் சில டிமான்டுகளை டிடிவி தினகரன் முன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கூட்டணி அரசியல்

அதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தால் துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும், தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தனக்கும் ஓ பன்னீர்செல்வத்திற்கும் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதுதான். சொல்லப்போனால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக உள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களிலும் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அங்கு தமிழக வெற்றி கழகம் சற்று வீக்காக இருக்கும் நிலையில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை வைத்து சமாளித்து விடலாம் என்பது தான் விஜயின் திட்டம். இதனால் டிடிவி தினகரனின் முன்மொழிவுக்கு தமிழக வெற்றிக் கழகம் சம்மதம் தெரிவித்து விட்டதாகவே சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான பேச்சு வார்த்தைகளும் இறுதி செய்யப்பட்டு பொங்கலுக்கு பிறகு கூட்டணி தொடர்பான இறுதி அறிக்கைகள் வெளியாகலாம் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+