அட்டர்ப்ளாப் ஆன அமித்ஷா கணக்கு.. தமிழ்நாட்டில் வேகாத பாஜக பருப்பு! தன் விரலால் கண்ணை குத்திய அதிமுக?
சென்னை: அதிமுகவுக்கு 170 இடங்கள், பாஜகவுக்கு 23 இடங்கள், தேமுதிகவுக்கு 3, ஓபிஎஸ் டிடிவிக்கு 3-3 என ஒரு வித்தியாச தொகுதி பட்டியல் சமூக வலைதளங்களில் திட்டமிட்டு அதிமுக பாஜகவால் வெளியிடப்பட்டது. அமித்ஷா -பியூஸ் கோயல் ஆகியோரின் ஆலோசனைப்படி அந்த பட்டியல் கசிய விடப்பட்ட நிலையில் அதுவே பாஜக கூட்டணிக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. தொகுதி பங்கிட்டால் கடும் அதிருப்தியில் இருக்கும் தேமுதிக உள்ளிட்டவை தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் சாய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியலில், நடிகர் விஜய் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் மையப் புள்ளியாக மாறியுள்ளது. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் அணிகளும் தவெக பக்கம் நகர வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனால் பாஜகக்கும் அதிமுகக்கும் புதிய சவால் உருவாகி உள்ளது.
சமீபத்தில், அதிமுகவுடன் பாஜக சார்பில் பியூஷ் கோயல் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, தொகுதி பங்கீடு குறித்த சில தகவல்கள் கசிந்தன. அதில், தினகரனுக்கு 6 இடங்கள், பிரேமலதாவுக்கு 6 இடங்கள், ஓபிஎஸ் அணிக்கு 3 இடங்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

அதிமுக- பாஜக கூட்டணி
இந்த தகவல்கள் அந்த கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தினகரன் இதைப்பற்றி பேசியபோது, "அமமுக தோற்கடிப்பதற்காக உருவாக்கப்படவில்லை. நாங்கள் எங்கள் பாதையில் செல்வோம். 6 இடங்கள் என்பது வெறும் வதந்தி," என்று தெரிவித்தார். அதேபோல், ஓபிஎஸ் அணியினரும், "மூன்று இடங்களுக்காக அதிமுக அணியில் சேர முடியாது," என்று தங்கள் கூட்டத்தில் தெளிவுபடுத்தினர். இதனால் அவர்கள் அதிமுக-பாஜக கூட்டணியில் குறைந்த முக்கியத்துவம் பெற்றுள்ளனர் என்ற உணர்வு உருவாகியுள்ளது.
தவெக கூட்டணி
இதின் தொடர்ச்சியாக, தவெக கூட்டணியில் இணைவதற்கான சாத்தியம் பற்றி தினகரனும், ஓபிஎஸும் திறந்த மனதுடன் பேசியுள்ளனர். தினகரன் முன்பே, "தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால், அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படலாம்," என்று கூறியிருந்தார். இந்நிலையில், தவெக தரப்பிலிருந்து மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்ற தகவலும் வெளியாகி உள்ளது. செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் இந்த தகவல்களை உறுதி செய்துள்ளனர். பிரேமலதாவும் 6 இட விவகாரம் குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, "இந்த தகவலை பரப்பிய கட்சியே பாதிக்கப்படும்," என்று கண்டனம் தெரிவித்தார்.
தொகுதி பங்கீடு
இப்போது நிலைமை என்னவெனில், திமுக, அதிமுக, தவெக, இந்த மூன்று அணிகள் தான் சில கட்சிகளுக்கு கூட்டணி வாய்ப்புகளாக உள்ளன. ஆனால், மரியாதையான சீட்டுகள் கிடைத்தால், பெரும்பாலான சிறிய மற்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அணிகள் தவெக கூட்டணியை தேர்வு செய்யலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், "திமுகவை தோற்கடிக்க பெரிய கூட்டணி அமையும்" என்று தொடர்ந்து கூறிவரும் பாஜக, தினகரன் - ஓபிஎஸ் - பிரேமலதா ஆகியோரை தக்கவைத்து கொள்ளுமா? அல்லது அவர்கள் தவெக பக்கம் நகர்ந்து விடுவார்களா? என்ற கேள்வி தற்போது மிகப் பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
தமிழக தேர்தல்
இந்த எல்லா பரபரப்புக்கும் காரணம், ஏற்கனவே சொன்ன தொகுதி பங்கீடு குறித்த பட்டியல் தான். அதாவது, தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக 170, பாஜக 23, பாமக 23, தேமுதிக 6, அமமுக 6, ஓபிஎஸ் தரப்பு 3, தமாகா 3 இடங்களில் போட்டியிடும் வகையில் தொகுதி பங்கீடு பேசப்பட்டுள்ளதாக இந்த தகவல் பரப்பப்பட்டு வந்தது. இதனால் தான் பல கட்சிகள் கோபமாக தவெக பக்கம் நகர இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், இதனை சற்றும் விரும்பாத பாஜக தலைமை, அமித்ஷா, கோயல் மூலமாக சமாதான பேச்சுகளை தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
-
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்!












Click it and Unblock the Notifications