ரூம் பூரா தேடி பாருங்க! 7 செகண்ட்ல எலுமிச்சை பழம் கிடைச்சா! நாங்கள் ஒத்துக்கிறோம் நீங்கள் ஜீனியஸ்னு!
சென்னை: இந்த படத்தில் எலுமிச்சை பழம் எங்கே இருக்கிறது என்பதை 7 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் ஜீனியஸ்தான்!
கண்கட்டி வித்தை எனப்படும் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை ஒரு புதிர் விளையாட்டு என்றும் சொல்லலாம். நெட்டிசன்கள் இந்த படங்களை தேடி எடுத்து தங்கள் கண் பார்வை திறனையும் புத்தி கூர்மையையும் செக் செய்து கொள்கிறார்கள்.

இவற்றை நண்பர்கள் மட்டுமில்லாமல் குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்பி அவர்களுடைய திறனை கண்டுபிடிக்கிறார்கள். அதிலும் படத்தை கொடுத்து புதிரை கேட்டால் மணிக்கணக்கில் வைத்துக் கொண்டு அழகு பார்க்கக் கூடாது.
குறிப்பிட்ட வினாடிகளுக்குள் விடையை சொல்ல வேண்டும். அதுதான் மிகப் பெரிய சவாலே. இந்த புதிரை கண்டுபிடிக்க எந்த தடைகளும் கிடையாது. நீங்கள் பூத கண்ணாடியை கொண்டும் பார்க்கலாம். ஆனால் குறைந்த நேரத்தில் சொல்ல வேண்டும். இன்றைய ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒரு அறை காணப்படுகிறது.
அந்த அறையில் மறைந்திருக்கும் எலுமிச்சை பழத்தை 7 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் பாஸ் ஜீனியஸ். ஆனால் குறைந்த நேரத்தில் கண்டுபிடிப்பது எல்லாம் அத்தனை எளிதல்ல. நிறைய கவனம் செலுத்தி கண்டுபிடிக்க வேண்டும்.
அந்த படங்கள் பார்க்கும் போதே தலை முடியை பிய்த்து எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கும். யாராவது பதில் சொல்லிவிட்டால் அடடா இங்குதானே நாமும் தேடினோம். நமக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை. இந்த எலுமிச்சை பழத்தை 7 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா. படத்தை ஜூம் செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். எலுமிச்சை பழத்தையும் கண்டுபிடித்துவிடலாம். அப்படி கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம்.

உங்கள் ஆளுமைகளை பற்றியும், உங்கள் மூளைத்திறனை பற்றியும் அறிந்து கொள்ள இருக்கும் ஒரே வழி ஆப்டிக்கல் இல்யூஷன் என்பதாகும். பாரம்பரியமான ஆளுமைத் திறனை சோதிக்கும் பரிசோதனை போன்றது அல்ல இது. ஒரு படம் இருக்கும். அதில் ஒரு புதிர் இருக்கும். இதை கண்டுபிடித்து உங்கள் அறிவுத்திறனையும் பார்வைத்திறனையும் தெரிந்து கொள்ளலாம். அதைவிட எத்தனை வினாடிகளில் கண்டுபிடிப்பீர்கள் என்பதுதான் சவாலான விஷயமாகும்.












Click it and Unblock the Notifications