படத்தில் எத்தனை வட்டங்கள் இருக்கு? 7 செகண்ட் டைம்.. சரியான விடையை சொல்லி ஜீனியஸ்னு நிரூபிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை வட்டங்கள் இருக்கின்றன என்று 7 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். பலரும் சரியான விடை என்னவென்று தெரியாமல் கோட்டைவிட்டுள்ளனர். எனவே படத்தில் 4 வட்டங்கள் இருக்கிறதா? இல்லை 8, 9 வட்டங்கள் இருக்கிறதா? என சரியாக விடையை கண்டுபிடித்து சொல்லுங்கள்.
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கண்பார்வையை சோதிக்கும். படத்தில் முதலில் ஒன்று தெரிவது போல் இருக்கும். ஆனால் உற்று கவனித்தால் அந்த பொருள் இருக்காது. ஒருமுறைக்கு இருமுறை பார்க்கும் போது தான் படத்தில் மறைந்து இருக்கும் பொருளானது கண்ணிற்கு புலப்படும்.

இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பல வகைகள் உள்ளன. கேரக்டர் அனலிசிஸ் ஆப்டிகல், ஆப்டிகல் புதிர் படங்கள் என பல வகைகள் உள்ளன. இதில் ஆப்டிகல் புதிர் படங்களானது தற்போது போட்டித் தேர்வுகளுக்கு கூட பயன்படுத்தப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போன்றே ஆப்டிகல் புதிர் படங்களில் விடையை கண்டுபிடிக்க சின்ன ட்ரிக்ஸ்களை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
அந்த ட்ரிக்ஸை கண்டுபிடித்தால் விடையை கண்டுபிடித்துவிடலாம். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பிங்க் கலர் மற்றும் கருப்பு நிறத்தில் வட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்றால், இந்த படத்தில் மொத்தம் எத்தனை வட்டங்கள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும்.
இந்த படத்தில் மொத்தம் எத்தனை வட்டங்கள் உள்ளன என்பதற்கு பலரும் தவறாகத் தான் விடையை சொல்லியிருக்கிறார்கள். எனவே உங்களால் சரியான விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள். அதுவும் 7 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. .. 7. ஓகே டைம் ஓவர். 7 விநாடிக்குள் சரியான விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.
படத்தில் மொத்தம் எத்தனை வட்டங்கள் உள்ளன என்பதற்கு கீழே, ஏபிசிடி என 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டம் / 4 வட்டங்கள் / 8 வட்டங்கள் / 9 வட்டங்கள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்ததும் பலரும் ஒரு வட்டம் என்றோ? அல்லது 4 வட்டங்கள் அல்லது ஆப்ஷனில் கொடுக்கப்படாத 5 வட்டங்கள் உள்ளன என்பது தான் விடை என்று சொன்னால் அது தவறு.
அப்போது எது தான் விடை என்று உங்களுக்கு குழப்பம் நேரிடும். எது தான் விடை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. படத்திற்கான விடை என்னவென்றால் 9 என்பதே சரியாகும். அது எப்படி என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. படத்தில் கருப்பு நிறத்தில் 4 வட்டங்களும், பிங்க் நிறத்தில் 4 வட்டங்களும், சென்டரில் கருப்பு நிறம் நிறைந்த வட்டம் ஒன்று என மொத்தம் 9 வட்டங்கள் உள்ளன. இதுவே சரியான விடை ஆகும். பலரும் கருப்பு நிறத்தை மட்டுமே மனதில் வைத்து வட்டங்களை எண்ணியிருப்போம். இதனால் சரியான விடையை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும்.













Click it and Unblock the Notifications