90% பேரால் கண்டுபிடிக்க முடியல.. படத்தில் எத்தனை பந்துகள் இருக்கு? முடிந்தால் சொல்லுங்க.. சவால்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை பந்துகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கான விடையை 90 சதவீதம் பேர் தவறாகவே சொல்லியிருக்கிறார்கள். எனவே உங்களால் சரியான விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம் வாருங்கள்..

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் புதிர் படங்கள் மூளைக்கு வேலை வைப்பவை. இந்த படங்களுக்கு விடைகள் கண்டுபிடிப்பது சவால் மிக்கது என்பதால் இணையத்தில் ஒய்வு நேரத்தில் உலவும் நெட்டிசன்கள் விடையை கண்டுபிடித்து தங்கள் அறிவுத்திறனை சோதித்து பார்க்கிறார்கள். அதுமட்டும் இன்றி தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் இதை அனுப்பி, விடையை கண்டுபிடித்து காட்டுங்கள் என சவால் விடுக்கிறார்கள்.

optical illusion offbeat trend


இதனால் இல்யூஷன் புதிர் படங்களுக்கு இணையத்தில் எப்போதுமே தனி வரவேற்பு உள்ளது. இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படத்தில், வண்ண வண்ண பந்துகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில், எத்தனை வண்ணங்கள் என கண்டுபிடிக்க வேண்டியது இல்லை.. எத்தனை பந்துகள் உள்ளன. என்பதை கண்டுபிடித்து சரியாக விடையை சொல்ல வேண்டும்.


இதை கண்டுபிடிக்க டைம் லிமிட் எல்லாம் இல்லை. சரியான விடையை கண்டுபிடித்து சொன்னாலே நீங்கள் அதி புத்திசாலிதான்.. கணக்கு பாடத்தில் 100 மார்க் எடுக்கும் திறன் கூட உங்களுக்கு இருக்கிறது எனலாம். எத்தனை பந்துகள் உள்ளன என்று கண்டுபிடிப்பது என்ன அவ்வளவு கஷ்டமா? என படத்தில் தெரியும் பந்துகளை மட்டும் எண்ணி விடையை சொல்லி விடக்கூடாது. அங்கதான் ட்விஸ்ட்டே இருக்கிறது.


வட்ட பந்துகளை கூம்பு போல அடுக்கி வைக்க சரிசமான முறையில் அடுக்கி வர வேண்டும். எனவே கண்ணுக்கு தெரிவது மட்டும் இன்றி, இந்த பந்துகளை அடுக்கி வைக்க எத்தனை பந்துகள் தேவைப்படும் என யூகித்து விடையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. பலரும் விடையை சரியாக கண்டுபிடித்து இருக்கலாம்.


அப்படி கண்டுபிடித்தவர்கள் என்றால் நீங்கள் கணக்கில் கில்லிதான். விடையை கண்டுபிடிக்க முடியவில்லை, 30, 35 என தாறுமாறாக விடைகள் வருகிறது என சொல்பவர்களுக்கு விடையை நாங்களே சொல்லி விடுகிறோம். இந்த படத்தில் மொத்தம் 16 பந்துகள் உள்ளன. விடையை சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+