Optical Illusion: 99% பேர் ஃபெயில்.. ஓநாய்களுக்கு நடுவே மறைந்து இருக்கும் ”ஸ்பைடர்..” எங்கே இருக்கு? கண்டுபிடிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் (Optical Illusion) படத்தில், ஓநாய்களுக்கு நடுவே மறைந்து இருக்கும் "எட்டுக்கால் பூச்சி" எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 8 செகண்டுகளில் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் கவனிப்புத்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் அளிக்கும் விடையின் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும். என்ன போட்டிக்கு தயாரா? 8 செகண்டுகளில் "ஸ்பைடர்" இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள்.

ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் மூளைக்கு வேலை வைப்பவை. ஒருவரின் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் இந்த இல்யூஷன் படங்கள் அமைந்து இருக்கும். அதாவது பார்ப்பதற்கு ஒரே மாதிரியான படங்களை கொடுத்து அதில் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டு இருக்கும்.

optical-illusion-99-fail-this-can-you-spot-the-hidden-spider-among-the-wolves

ஆப்டிக்கல் இல்யூஷன் படம்

ஒரே மாதிரியாக இருப்பதால் இவற்றில் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலானது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடுக்கப்பட்டிருப்பதால், அந்த நேரத்திற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் எனக்கருதி கொஞ்சம் நெருக்கடி ஏற்படும்.

இது ஒருவகையான இல்யூஷன் படங்கள் என்றால், மற்றொரு படத்தில் ஏதேனும் மறைந்து இருக்கும் ஒரு பொருளையோ, விலங்கையோ கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டியதாலும், அதிக கவனிப்புத்திறன் இருந்தாலே மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும்.

மறைந்து இருக்கும் எட்டுக்கால் பூச்சி

இணையத்தில் போர் அடிக்கும் நேரத்தில் கொஞ்சம் பயனுள்ள வகையில் பொழுதை போக்க நினைக்கும் நெட்டிசன்கள் இதுபோன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க முயற்சிப்பதோடு, விடையை கண்டுபிடித்துவிட்டு தங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களும் கண்டுபிடிக்கிறார்களா என சோதித்து பார்க்கிறார்கள்.

இதனால், இத்தகைய இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடிக்கின்றன. சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த காட்டிற்குள் நிறைய ஓநாய்கள் உள்ளன போல் படம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்கு உற்று கவனித்து பார்த்தாலும் இதுதான் தெரியும். ஆனால் இந்த படத்தில் ஓர் எட்டுக்கால் பூச்சி ஒன்று மறைந்துள்ளது.

8 செகண்டுகள் மட்டுமே டைம்!

இந்த எட்டுக்கால் பூச்சி எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்றைய சவால் ஆகும். ஆம், அதுவும் 8 செகண்டுகளில் கண்டுபிடிக்க வேண்டும். விடையை கண்டுபிடிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால், 8 செகண்டுகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் அதிக கவனிப்புத்திறன் கொண்டவர் தான்!

ஆனால் ஸ்பைடர் இருக்கும் இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் கொடுக்கிறோம். அதாவது படம் முழுக்க தேடாமல் சற்று வித்தியாசமாக யோசிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், படத்தின் கீழ் பகுதியில் மட்டும் தேடிப்பாருங்கள் போதும். விடையை கண்டுபிடித்துவிடலாம்.

இதுதான் விடை

optical-illusion-99-fail-this-can-you-spot-the-hidden-spider-among-the-wolves

இப்போது பலரும் ஸ்பைடர் எங்கே இருக்கு என்று கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். தெரியாதவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஸ்பைடர் இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளவும். 8 செகண்டுக்குள் ஸ்பைடர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர்கள் கமெண்ட் செய்யவும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+