Optical Illusion: உங்க கண்களுக்கு சேலஞ்ச்! இங்கே மறைந்து இருக்கும் பூனையை கண்டுபிடிங்க.. 15 செகண்ட் தான் டைம்
சென்னை: உங்க கண்களுக்கு சேலஞ்ச் கொடுக்கும் வகையில் இங்கே ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படத்தில் பூனை ஒன்று உள்ளது. இந்த பூனை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால். 15 செகண்ட் டைமுக்குள் உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா என சோதனை செய்து பாருங்கள்..
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்த்தே சலித்து போகும் நேரத்தில் இதுபோன்ற இல்யூஷன் படங்கள் மூளைக்கு வேலை கொடுத்து புத்துணர்ச்சியை கொடுப்பதால் நெட்டிசன்கள் இந்த படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

பூனை எங்கே இருக்கு?
இல்யூஷன் படங்களை பொறுத்தவரை நம் கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழிய வைத்து வைடும். இந்த படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க கொஞ்சம் கவனிப்புத்திறனை அதிக செலுத்த வேண்டும் என்பதால், 15 செகண்டுக்குள் கண்டு பிடிப்பது கொஞ்சம் சவாலானதுதான். சரி.. இங்கே தரப்பட்டுள்ள படத்தில் ஒரு பூனை ஒளிந்து இருக்கிறது. அந்த பூனை எங்கே மறைந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
அதுதான் உங்களுக்கான டாஸ்க். அதிலும் 15 செகண்டில் விடையை கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. படத்தை நன்றாக உற்று பாருங்கள்.. ஒரு அழகான பங்களா வீட்டு முன்பாக கார் ஒன்று நிற்கிறது. சுற்றிலும் மரங்கள், பசுமை வெளிகள் உள்ளன. பூந்தொட்டிகளிலும் அழகு செடிகள் உள்ளன.
விடையை கண்டுபிடித்துவீட்டிர்களா?
இந்த இடத்திற்குள்தான் பூனை ஒன்று இருக்கிறது. அந்த பூனையை கண்டுபிடித்து தூக்குங்கள்.. விடையை பலரும் எளிதாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். விடையை கண்டுபிடிக்க முடியாதவர்கள் இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து படத்தை பாருங்கள்.. இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லையா.. உங்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம்.
படத்தில் மறைந்து இருக்கும் பூனையின் நிறமும் கருப்புதான்.. இப்போ பொறி தட்டிவிட்டதா? படத்தை மீண்டும் உற்று பாருங்க.. இப்போ ஓரளவு எளிதாக கண்டுபிடித்து இருப்பீங்க.. சரி இப்பவும் கண்டுபிடிக்க முடியவில்லையா? விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம்.
இங்கே தான் இருக்கிறது!
இங்கே நிறுத்தப்பட்டு இருக்கும் காரின் முன்பாக பாருங்கள்.. கருப்பு நிற மியாவ் மியாவ் பூனை உங்களையே உன்னிப்பாக பார்த்துக்கொண்டு இருப்பதை பார்க்க முடியும்.. சரியாக தெரியவில்லை எனில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பூனை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் கீழே கமெண்ட் செய்யுங்கள்.. எத்தனை பேர் 15 செகண்டில் விடையை கண்டுபிடித்து இருக்கிறீர்கள் என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
