உங்களுக்கு ஒரு சேலஞ்ச்.. எந்த வாளியில் முதலில் தண்ணீர் நிரம்பும்.. முடிந்தால் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் புதிர் படத்தில், ஒரு குழாயில் இருந்து தண்ணீர் விழ அது 7 வாளிகளுக்கு செல்வது போன்று உள்ளது. இதில், எந்த எண் கொண்ட வாளி முதலில் நிரம்பும் என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். 100-ல் 90 சதவீதம் பேர் தவறாக தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போன்றே புதிர் படங்களும் நமது மூளைக்கு வேலை கொடுத்து சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். பார்க்கும் நம் கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழிய செய்யும். அந்த வகையில் தான் இன்று ஒரு ஆப்டிகல் புதிர் படம் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இந்த படத்திற்கான விடையை 90 சதவீதம் பேர் தவறாக தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே உங்களால் சரியாக கண்டுபிடிக்க முடிகிறதா என சோதித்து பாருங்கள்..

இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படத்தில், வரிசையாக தண்ணீர் நிரப்பும் வாளி உள்ளது. இந்த வாளிகளில் முதல் எண் கொண்ட வாளியில் தண்ணீர் விழுகிறது. அந்த வாளியில் இருந்து பிற வாளிகளுக்கு தண்ணீர் போக வழி உள்ளது. எனவே, இந்த வாளியில் தண்ணீர் ஊற்றும் போது முதலில் எந்த வாளி நிரம்பும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் அதுவே உங்களுக்கான டாஸ்க்..
என்ன சவாலுக்கு ரெடியா..உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1,2,3,4,5.....7 ஓகே டைம் ஓவர்.. உங்களில் பலரும் இந்த புதிர் படத்திற்கான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். உங்களுக்கு பாராட்டுக்கள்.. நீங்கள் உண்மையாகவே ஜீனியஸ்தான்.. ஆனால் 100 ல் 90 சதவீதம் பேர் 4 எண் கொண்ட வாளி தான் முதலில் நிரம்பும் என்றும், இது தான் சரியான விடை என்றும் நினைக்கின்றனர்.
ஆனால் இதில் மிகப்பெரிய ட்விஸ்ட் உள்ளது. ஏனெனில் சில வாளிகளில் தண்ணீர் செல்லும் குழாய்களில் அடைப்பு உள்ளது. அதை நோட் பண்ணாமல் படக்கென்று விடையை சொல்லிவிடுவார்கள். எனவே நன்கு கூர்ந்து எந்தெந்த வாளிகளில் குழாய்களுக்கு தண்ணீர் செல்ல முடியாதபடி அடைப்பு உள்ளது என்பதை கவனித்து பொறுமையாக சிந்தித்தால் எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம்.
ஆனால் அப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லையே?.. அல்லது.. கண்டுபிடித்த விடை சரியானதுதானா என குழம்பிக் கொண்டு இருக்கிறீர்களா நீங்கள்... இங்கே விடையை கண்டுபிடிக்க ஐடியாக்களை சொல்கிறோம்..
* இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் மொத்தம் 7 வாளிகள் உள்ளன.
* முதல் வாளியில் தண்ணீரை ஊற்றும் போது 3 வது வாளிக்கு தண்ணீர் செல்லும்
* 3-வது வாளியில் இருந்து 4-வது வாளிக்கு செல்லும் குழாய் மூடியுள்ளது.
* 5-வது வாளிக்கு செல்லும் குழாயும் மூடியே இருக்கிறது.
* இதேபோல் வலது பக்கம் பார்த்தீர்கள் என்றால்.. 2-வது வாளியில் இருந்து 6-வது பக்கெட்டிற்கு செல்லும் குழாயும் மூடியுள்ளது.
* 2-வது வாளிக்கு தண்ணீர் வரும் குழாய் 6-வது பக்கெட்டை விட தாழ்வாக உள்ளது. எனவே முதலில் இந்த வாளிக்குதான் தண்ணீர் விழும்.
* எனவே, முதலில் 3 வது எண் கொண்ட வாளியில் தான் தண்ணீர் நிரம்பும். அதன்பிறகு 7-வது எண் கொண்ட வாளி நிரம்பும். இதுவே சரியான விடையாகும்.

-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications