உங்களுக்கு ஒரு சவால்.. படத்தில் ஒரு 'தப்பு' இருக்கு.. 10 செகண்ட்தான் டைம்! முடிந்தால் கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் புதிர் படத்தில் ஒரு தவறு இருக்கிறது. வரிசையாக ஏபிசிடி என்ற ஆங்கில எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே ஆங்கில வார்த்தைகளும் உள்ளன. இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை 10 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் புதிர் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. நமது கண்களை குழப்பி, மூளையை கசக்கி பிழிய வைத்து விடும். நெட்டிசன்கள் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு சேலஞ்ச் அளித்து புத்துணர்ச்சியை அளிக்க கூடிய வகையில் இந்த இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் உள்ளன.

optical illusion offbeat trend

ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் போன்றவையும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஹிட் அடிக்கிறது. சவாலான செஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதை போல ஒரு உணர்வை சில நொடிகளுக்கு இந்த இல்யூஷன் புதிர் படங்கள் கொடுக்கிறது. சில படங்கள் விடையை கண்டுபிடிப்பதற்குள் பாடாய் படுத்திவிடும். அதிலும் குறிப்பிட்ட டைமிற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற டாஸ்க் இருந்தால் அந்த நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உணர்வு கூடுதல் சுவாரசியத்தையும் மூளையை வேகமாக செயல்படவைக்கவும் தூண்டுகிறது.

விடையை கண்டுபிடித்த நெட்டிசன்கள் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து விடையை கண்டுபிடிக்கிறார்களா? நம்மை விட ஷார்ப்பா இருக்காங்களா? என ஜாலியாக டெஸ்ட் செய்து கண்டுபிடிக்கவில்லை என்றால் கலாய்க்கிறார்கள். இப்படியாக இந்த படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. அந்த வகையில், இன்று ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படத்தைதான் இங்கே பார்க்க போகிறோம்.

இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் இல்யூஷன் படத்தில், ஒரு மிஸ்டேக் இருக்கிறது. அதை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான சவால். என்ன ரெடியா? படத்தை நன்றாக பாருங்கள்.. படத்தில் ஏ.. பி..சி..டியின் 26 எழுத்துக்களும் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு கீழே விரைவாக கண்டுபிக்க வேண்டும் என்பதுபோன்ற சில ஆங்கில வார்த்தைகளும் அடங்கியுள்ளன. மொத்த படத்தையும் நன்றாக பாருங்கள்..

இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கியது...1,2,3,.....10.. ஒகே டைம் முடிந்தது. உங்களில் பலரும் விடையை சரியாக கண்டுபிடித்து இருப்பீர்கள்.. 10 செகண்ட்லாம் தேவையில்லை.. 5 செகண்டில் கண்டுபிடித்துவிட்டேன் எனக் கூறும் நபர்களும் இருக்கலாம்..விடையை சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்..

optical illusion offbeat trend

இங்கே மிஸ்டேக் இருப்பது போலவே இல்லை என நினைப்பவர்கள் கூடுதாலக 5 செகண்ட் எடுத்து முயற்சித்து பாருங்கள்.. இப்போதும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லையா.. படத்தில் உள்ள தவறு எது என்பது இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.. விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+