optical illusion: ஆஹா அழகான வண்ண கிளிகளுக்கு நடுவே ஒரு பச்சோந்தி! 10 செகண்டில் கண்டுபிடிங்க!
சென்னை: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கலர் கலராக கிளிகள் உள்ள நிலையில் அதில் மறைந்திருக்கும் ஒரு பச்சோந்தியை 10 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள்தான் கிங்!
என்ன சவாலை ஏற்கிறீர்களா? டிரை செய்து பாருங்க! காசா, பணமா? உங்கள் அறிவை பயன்படுத்துகிறீர்கள். இதன் மூலம் யோசிக்கும் திறன் அதிகரிக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. சுருக்கமாக சொல்ல போனால் திருப்பதியில் மொட்டை அடித்த உயரமான சிகப்பு நிற சர்ட் அணிந்தவரை கண்டுபிடிப்பது போன்றது. இது நடக்கிற காரியமா?
திருப்பதி என்றாலே மொட்டைதான். அதில் பெரும்பாலும் உயரமாகவும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சிவப்பு நிற சட்டையை அணியத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் போது எப்படி கண்டுபிடிப்பது. அது போல் மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி?
அது போல்தான் குழப்பங்கள் நிறைந்தது. கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிகல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.
நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிகல் இல்யூஷன், பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. அப்படிப்பட்ட நிலையில் தற்போது நாங்கள் ஒரு படத்தை பிரைட்சைடு என்ற சமூகவலைதளத்தில் இருந்து எடுத்து கொடுக்கிறோம். அதில் கேட்கும் கேள்விக்கு 10 வினாடிகளில் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இந்த படத்தில் நிறைய கலர் கலரான கிளிகள் உள்ளன. கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த கிளிகள், மனதுக்கும் இதமான தன்மையை கொடுக்கிறது. அழகு கண்களை பறிக்கிறது. அதே சமயம் அழகு ஆபத்தானது. இந்த கிளிகளுக்கு நடுவே ஒரு பச்சோந்தி மறைந்திருக்கிறது.
பச்சோந்தி என்றால் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. எனவே இந்த கிளிகளின் நிறங்களுக்கு இடையே நிறம் மாறும் பச்சோந்தியை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் ஆற்றுலுக்கும் இது சவால் என வைத்துக் கொண்டாலும் வைத்துக் கொள்ளுங்கள். நம்மால் முடியாதது எதாவது இருக்கா என்ன?
என்ன 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஏற்கெனவே மண்டை காய்ந்துள்ள உங்களை நாங்கள் மேலும் வெறுப்பேற்ற விரும்பவில்லை. விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். பச்சோந்தியை வட்டமிட்டு காட்டியுள்ளோம். தெரிகிறதா? அதன் கண்கள் மட்டும் தெரிகிறது பாருங்கள், அது கிளியாக இருக்காதா என நீங்கள் நினைக்கலாம். கிளிகளுக்கு கண்கள் வட்டமாகவும் வட்டமிட்ட பச்சோந்தியின் கண்களும் வட்டமாக இருந்தாலும் அதன் இமைகள் முட்டை வடிவத்தில் உள்ளது. இதுதான் ஆப்டிகல் இல்யூஷன்! இனி தொடர்ந்து விளையாடலாமா?

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications