உங்கள் கண்கள் ஷார்ப்பா.. வாங்க டெஸ்ட் பண்ணிடலாம்! 6 செகண்ட் டைம்.. படத்தில் சிங்கத்தை கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கம் மறைந்து இருக்கிறது. இந்த சிங்கத்தை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 6 செகண்டில் நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் ஜீனியஸ் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தற்போது இணைய உலகில் அதிகம் டிரெண்ட் ஆகிவிடுகின்றன. பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை கண்கட்டி வித்தை எனலாம்.. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொழுதுபோக்கோடு சவால் நிறைந்ததாகவும் இருப்பதால் ஓய்வு நேரத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளன.

இல்யூஷன் படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன்.. ஒரு விஷயத்தை அணுகும் முறை உள்ளிட்டவற்றையும் கணிக்க கூடியதாக உள்ளது. சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வரலாம்.. கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் மறைந்து இருக்கும் படத்தில் சிங்கத்தை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும்.
சிங்கம் எங்கே இருக்கிறது?: இந்த படத்தில் அழகிய பார்க் உள்ளது. இந்த பார்க்கில் குழந்தைகள் ஆங்காங்கே விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள் ஒருபக்கமும் சின்னஞ்சிறு குழந்தைகள் ஒருபக்கமும் இருக்கிறார்கள். பெற்றோர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்க குழந்தைகளோ.. தங்கள் வழக்கமான உற்சாகத்துடன் ஜாலியாக விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த பார்க்கில் அழகிய பசுமையான மரங்கள்... ஆங்காங்கே விலங்குகள் நின்று கொண்டிருப்பது போன்ற ஒரு கற்பனை வரைபடம் உள்ளது. இந்த படத்தில் ஒரு சிங்கமும் மறைந்து இருக்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் வெறும் 6 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்தால் உண்மையிலேயே நீங்கள் ஜீனியஸ்தான்..
வலது பக்கமாக தேடுங்கள்: சரி உங்களுக்கான டைம் ஸ்டார்ட்...1, 2, 3... 6 ..ஓகே.. உங்களில் பலரும் சிங்கம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்... சரி கண்டுபிடிக்கவில்லையா.. கவலையே வேண்டாம்.. சில டிப்ஸ் கொடுக்கிறோம். அதை வைத்து கேள்விக்கான விடையை கண்டுபிடித்து விடலாம்.. படத்தின் இடது பக்கமாக சிங்கம் இல்லை... எனவே வலது பக்கமாக சிங்கத்தை தேடுங்கள் எளிதாக கண்டுபிடிக்கலாம்..
அட அப்பவும் தெரியவில்லையா.. மேலும் ஒரு எளிதான டிப்ஸ்.. படத்தில் உள்ள பிற விலங்குகளை போல சிங்கம் தரையில் இல்லை.. வலது பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் உள்ளது. இப்போது பெரும்பாலோனோர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம்... படத்தில் சிங்கம் மறைந்து இருக்கும் இடம் இங்கே வட்டமிட்டும் காட்டப்பட்டுள்ளது. அதை வைத்து தெரிந்து கொள்ளலாம்..
ஆப்டிகல் இல்யூஷன் என்றால் என்ன?: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் என்பது பொதுவாக ஒவ்வொருவரும் பார்க்கும் கோணம், ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது ஆகும். ஒருவரின் மனநிலையையை பொறுத்தும் விடையை கண்டுபிடிப்பதில் மாறுபாடு ஏற்படும். அதாவது ஜாலியான மனநிலையில் இருந்தால் சீக்கிரமாகவே விடையை கண்டுபிடித்துவிடலாம்..

அதுபோக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து தொடர்ந்து பயிற்சி இருப்பவர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.. எனவே. இந்த இல்யூஷன் படங்கள் எல்லாம் ஜாலியான ஒரு புதிர் விளையாட்டுதானே தவிர ஒருவரின் அறிவுத்திறனை அப்படியே.. பிரதிபலிக்கவில்லை என்பதையும் மனதில் போட்டுக்கொள்ளுங்கள்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications