தேர்வு அறையில் ‘பிட்’ அடிப்பது யாரு?.. 5 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கபட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேர்வு அறை ஒன்றில் 2 மாணவிகளும், ஒரு மாணவரும் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுகிறார். அந்த ஸ்டூடண்ட் யார் என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால்.. அதிலும் 5 செகண்டில் கண்டுபிடிக்கனும்.
கண்கட்டி வித்தை என்று சொல்லப்படும், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இருக்கும். ஒருவரின் கவனிப்புத்திறன், புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருப்பதால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இன்று இணையத்தில் பரவி வரும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேர்வு அறை ஒன்றில் 2 மாணவிகளும் ஒரு மாணவரும் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுகிறார். அந்த ஸ்டூடண்ட் யார் என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால்.. அதிலும் 5 செகண்டில் கண்டுபிடிக்கனும்..
என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1,2,3...5.. டைம் ஓவர்.. தேர்வு அறையில் பிட் அடிக்கும் அந்த சீட்டிங் ஸ்டூடண்ட் யார் என்பதை இந்நேரம் பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.. ஏனெனில், படத்தை பார்த்ததுமே விடையை தெரிந்து கொள்ளும் அளவுக்கான மிக எளிமையான இல்யூஷன் படம் தான்.
ஆகவே, இதுக்கெல்லாம் 5 செகண்ட் எல்லாம் தேவையில்லை... 3 செகண்டே போதும் என பலரும் நினைத்து இருப்பீர்கள்.. 5 செகண்டில் விடையை கண்டுபிடித்து இருக்கிறீர்கள் என்றால் உங்கள் கவனிப்புத்திறன் உண்மையாகவே அபராமாக உள்ளது. சரி.. கண்டுபிடிக்க முடியவில்லையே என நினைப்பவரா நீங்கள்.. கூடுதலாக ஒரு 5 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்...
படத்தை நல்லா உற்று பாருங்க ஈசியாக விடையை கண்டுபிடித்து இருக்கலாம்.. இப்போதும் கண்டுபிடிக்காவிட்டால் படத்திற்கான விடை நாங்களே சொல்லிவிடுகிறோம். கடைசி பெஞ்சில் படுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் மாணவர் பிட் அடிக்க அனைத்து ஏற்பாடுகளுடனும் வந்து இருக்கிறார். அது எப்படி என யோசிக்கிறீர்களா...

அந்த மாணவரின் முழங்காலை பாருங்கள்.. ஏதோ பாடத்தின் ஒரு பகுதியை முழங்காலில் எழுதிக் கொண்டு வந்துள்ளார். ஆசிரியர் அசந்த நேரத்தில் பார்த்து எழுத சகல ஏற்பாடுடன் வந்து இருக்கும் இந்த மாணவர்தான் படத்திற்கான விடை..












Click it and Unblock the Notifications