உங்க கண்கள் ஷார்ப்பா? வாங்க டெஸ்ட் பண்ணிடுவோம்.. F க்கு நடுவே E.. எங்கே இருக்கு கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் F - என்ற ஆங்கில எழுத்து கொடுக்கப்பட்டுள்ளது. படம் முழுக்கவே F இருந்தாலும் இந்த எழுத்துக்குள் E என்ற லெட்டரும் மறைந்து இருக்கிறது. E எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 10 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் புதிர் படங்கள் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை வைப்பவை. ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆப்டிகல் இல்யூஷன் நல்ல தீனியாக அமைந்து விடுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை படத்தில் விடை மறைத்து கொடுக்கப்பட்டு இருக்கும்.

அதாவது, திருப்பதியில் முன்பின் தெரியாத ஒருவரை பார்க்க செல்லும் போது மொட்டை அடித்து இருப்பேன் அதுதான் என் அடையாளம் என ஒருவர் சொன்னால், கண்டுபிடிப்பது எந்த அளவுக்கு சவாலான விஷயமோ அதேபோல விடையை கண்டுபிடிப்பது சவாலானதாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை விடைகளை கண்டுபிடிப்பதை விட ஒருவரின் புத்திக் கூர்மை, ஐகியூ திறன் ஆகியவற்றைக் கூட கண்டுபிடித்து விடலாம் என சில ஆய்வுகள் சொல்கின்றன.
ஆனால், அப்படி எல்லாம் இல்லை.. சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல தொடர்ச்சியாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்தால் அதில் விடைகள் எப்படி ஒளிந்து இருக்கும் என்ற டிரிக்சை கண்டுபிடித்து விடலாம். எனவே அடிக்கடி இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்கள் எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம் என்றும் சிலர் சொல்லும் விஷயமாக உள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது. இந்த படத்தில் வரிசையாக F என்ற ஆங்கில எழுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே எத்தனை F கள் இருக்கின்றன என கண்டுபிடிக்க வேண்டாம்.. அந்த அளவுக்கு கஷ்டமான டாஸ்க் எல்லாம் கொடுக்கவில்லை. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் E- ஆங்கில எழுத்து மறைந்துள்ளது.
அது எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க் ஆகும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1, 2, 3,4....10 ஒகே டைம் முடிந்தது. படத்திற்கான விடையை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. உங்கள் கண் பார்வை செம ஷார்ப்பாக உள்ளது. சரி.. E எங்கே உள்ளது என கண்டுபிடிக்க முடியவில்லையே என நினைப்பவரா நீங்கள்..
ஒரு குறிப்பு தருகிறோம். அதை வைத்து விடையை எளிதாக கண்டுபிடித்து விடலாம்... படத்தின் வலது ஓரத்தில் தான் E உள்ளது. எனவே வலது பக்கமாகவே விடையை தேடி பாருங்க்கள்... இப்போது விடையை ஈசியாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். இன்னும் கூட விடையை தேடிக்கொண்டு இருக்கிறோம் என நினைக்கிறீங்களா... விடையை நாங்களே வட்டமிட்டு காட்டியுள்ளோம். பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications