ஆப்டிகல் இல்யூஷன்: படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன? 10 செகண்ட் தான் டைம்! கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.. உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் கண்கட்டி வித்தை படங்கள், புதிர்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எப்போதும் பரபரப்பாக இருந்துவிட்டு.. ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்கள்.. பயனுள்ள வகையில் பொழுது போக்கும் விதமாக இந்த படங்கள் இருப்பதால் பலரும் புதிர்களுக்கான விடையை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை விடையை கண்டுடிப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் ஒரு படத்தை பார்க்க வேண்டியிருக்கும். அதாவது மேலோட்டமாக பார்த்தால் விடையை கண்டுபிடிக்க முடியாது. ஆழ்ந்து பார்த்தால்தான் விடை கண்ணுக்கு புலப்படும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை விடையை கண்டுபிடிக்க குறிப்பிட்ட டைமும் கொடுக்கப்படுவதால் விடையை கண்டுபிடிக்க கொஞ்சம் நெருக்கடி இருக்கும்.
இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இல்யூஷன் படங்களில் உள்ள பெரிய சவால். ஒருவரின் கவனிப்புத்திறன், புத்திக்கூர்மை உள்ளிட்டவற்றையும் சோதிக்கும் விதமாக இந்த படங்கள் இருப்பதாக ஆய்வுகளும் சொல்கின்றன. இங்கே விஷயத்திற்கு வரலாம்.. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்..
என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. படத்தை நன்கு உற்று பாருங்கள்...1,2,3,.....10 ஓகே டைம் ஓவர்.. பெரும்பாலானோர் படத்திற்கான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். விடையை சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள்.. உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது.. சரி கண்டுபிடிக்காதவர்களுக்கு கூடுதலாக ஒரு 5 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்...

இப்போது முயற்சித்து பாருங்கள்.. படத்தில் மொத்தம் 9 விலங்குகள் இருக்கின்றன.. விடையை சொல்லியாச்சு.. அந்த ஒன்பதுவிலங்குகள் எது எல்லாம் கண்டுபிடித்து விட்டீர்களா.. படத்தை பார்த்தவுடன் யானை தெரிகிறது. இந்த யானையின் கண்களை பாருங்கள்.. அதில் மீன் உள்ளது. யானையின் படத்தோடு கழுதை உள்ளது. இப்படியாக மொத்தம் 9 விலங்குகள் இருக்கின்றன. படத்தில் மறைந்து இருக்கும் ஒன்பது விலங்குகளையும் இங்கே வட்டமிட்டு காட்டப்படுள்ளது. கண்டுபிடிக்க முடியாதவர்கள்,.. இதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்..












Click it and Unblock the Notifications