சூப்பர் puzzle! மூளையை கசக்கி பிழிந்து ஒரு தவறை கண்டுபிடிங்க! அதுவும் 9 செகண்டில்!
சென்னை: இந்த படத்தில் ஒரு தவறு இருக்கிறது அதை 9 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்பதை பார்க்கலாமா?
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி? குழப்பம் ஏற்படுமோ அப்படித்தான் இவைகளும்.

கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.
நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. தற்போது மூளைக்கு வேலை கொடுக்கும் பசில்களை பார்க்கலாம். பசில் என சொல்வதைவிட ஆளுமையை கண்டறிவது என சொல்லலாம்.
Can you Find the mistake? என கேட்கப்பட்டுள்ளது. அதில் 1 முதல் 9 வரையிலான எண்கள் 4 இலக்கங்களில் எழுதப்பட்டுள்ளன. அதாவது 1111 2222 3333 4444 5555 6666 7777 8888 9999 என எழுதப்பட்டுள்ளது. அது போல் 10 என்ற எண்ணுக்கு பதிலாக 0000 என்ற எழுத்து எழுதப்பட்டுள்ளது.
இதில் என்ன தவறு உள்ளது என்பதை 9 வினாடிகளில் கண்டறிய வேண்டும். முடியுமா? Can you find the mistake என்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா என பார்த்தால் அதில் ஏதும் இல்லை, பக்காவாக இருக்கிறது. என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9... டைம் முடிந்தது.
விடையை சொல்லுங்கள்! என்ன தெரியவில்லையா? கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள 0000 என்ற எண்களில் ஒரு தவறு இருக்கிறது. அதாவது ஜீரோ என்பதற்கு பதிலாக ஆங்கில எழுத்தான oooo என எழுதப்பட்டுள்ளது. இதுதான் தவறு. என்ன ரொம்பவும் மண்டையை பிய்த்துவிட்டீர்களா? என்ன செய்வது இதை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதெல்லாம் ஒரு பசிலா என நீங்கள் கேட்பது எங்களுக்கு கேட்கிறது. எத்தனை பேர் சரியாக கண்டுபிடித்தீர்கள் என கமென்ட்டில் சொல்லுங்கள் மக்களே!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications