ஆசிரியரின் மூக்கு கண்ணாடி.. எங்கே இருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க.. 10 செகண்ட் டைம்
சென்னை: கிளாஸ் ரூமில் ஆசிரியர் முன்னால் சேட்டை செய்து கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு இடையே மூக்கு கண்ணாடி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த மூக்கு கண்ணாடியை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். சவாலுக்கு ரெடியா?
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கண்களையே ஏமாற்ற வைக்கும். மூளையை கசக்கி பிழிய வைத்துவிடும். சவால் மிக்க இந்த இல்யூஷன் படங்கள் நல்ல பொழுதுபோக்காக இருப்பதோடு, நமது அறிவுத்திறனையும் சோதிக்கும் வகையில் இருப்பதால் இணையத்தில் இப்போது இல்யூஷன் படங்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து ஒருவரின் புத்திக் கூர்மை, சிந்தனை திறன் ஆகியவற்றையும் கூட கணித்து விடலாம் என்று ஆய்வுகள் சொல்லியிருக்கிறதாம். பொதுவாக இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் விடை கன்ணுக்கு தெரியாது.. ஆழ்ந்து பார்த்தால்தான் விடை கண்ணுக்கு தெரியும். இல்யூஷன் படங்கள் சில போட்டித்தேர்வுகளில் கூட இடம் பெறுவதாக சொல்லப்படுகிறது.
சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படம் கொஞ்சம் சவால் மிக்கது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள்.. இந்த படத்தில், வகுப்பறை ஒன்றில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டு இருக்கிறார். மாணவர்கள் பாடங்களை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வகுப்பறையில் மூக்கு கண்ணாடி ஒன்று ஒளித்து வைக்கப்பட்டுள்ளது.
ஒளித்து வைக்கப்பட்டு இருக்கும் அந்த மூக்கு கண்ணாடியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 10 செகண்ட்தான் டைம்.. என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1,2,3...10 படத்திற்கான விடையை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். விடையை சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது.
கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு சின்னதா ஒரு டிப்ஸ் தருகிறோம். ஈசியாக கண்டுபிடிச்சிடலாம். சேட்டை பிடித்த இந்த மாணவர்கள் வகுப்பறையில் பேப்பர் ராக்கெட் விடுவது என ஆசிரியர் முன்பே தங்கள் சேட்டைகளை காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, இந்த மூக்கு கண்ணாடியை மாணவர்களே மறைத்து வைத்து இருக்க வேண்டும். இதனால் கண்ணாடியை நீங்கள் மாணவர்கள் அமர்ந்து இருக்கும் இடத்திலேயே தேடுங்கள்.
ஏனென்றால் அங்கேதான் படத்திற்கான விடை மறைந்துள்ளது. சரி இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறீர்களா.. படத்திற்கான விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். டேபிளை ஒட்டி அமர்ந்து இருக்கும் மாணவியின் பின்னால் இருக்கும் மாணவரின் டேபிளை நன்கு உற்று பாருங்க.. அங்கேதான் அந்த மூக்கு கன்ணாடி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications