ஒன்றா.. இரண்டா.. மொத்தம் 3 "முயல் குட்டிகள்" இருக்கு.. 8 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க தான் கிங்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மரம் ஒன்று உள்ளது. ஆனால் அந்த படத்தில் 3 முயல் குட்டிகள் ஒளிந்து இருக்கின்றன. 3 முயல் குட்டிகள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பது தான் இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள், பார்க்கும் நம் கண்களையே ஏமாற்ற வைக்கும். உதாரணமாக, கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும் என்ற பாடல் வரிக்கு கிட்டத்தட்ட அப்படியே பொருந்துவது என்றால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்குதான்.. அதாவது இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும்.

இதன் காரணமாகவே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒளியியல் மாயை படம் என்கிறார்கள். அதுபோக இல்யூசன் படங்களில் விடைகளை கண்டுபிடிப்பது சற்று சவால் மிக்கவையாக இருக்கிறது. இதனால் இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் அமைந்துள்ளன. ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றது.
இப்படி படங்களில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிப்பவர்கள், தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அனுப்பி வைத்து அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்றும் சோதித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இந்த ஆப்டிகல் படத்தில் மரம் ஒன்று இருப்பது போல் உள்ளது.
ஆனால் அந்த படத்தில் 3 முயல் குட்டிகள் ஒளிந்து இருக்கின்றன. அந்த முயல் குட்டிகள் எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பது தான் இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா.. உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1..2 ... 3.. .. 8. ஓகே டைம் ஓவர்.. குறிப்பிட்ட 8 செகண்டிற்குள் 3 முயல் குட்டிகளையும் கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் நீங்க கிங் தான்.
ஆனால் எப்படி பார்த்தாலும் ஒரு முயல் குட்டி தானே இருக்கிறது. மற்ற இரண்டு முயல் குட்டிகள் எங்கே இருக்கின்றது என்று தோன்றுகிறதா.. பரவாயில்லை... இன்னும் கொஞ்சம் உற்று பாருங்கள்.. எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மரத்தின் கிளைகளை மட்டும் பாருங்கள். அதில் தான் மூன்று முயல்களும் இருக்கின்றது. இப்போது தேடி பாருங்கள். கண்டுபிடித்து விடலாம்.
படத்தின் வலதுபுறத்தில் மேல் பகுதியில் பார்த்தோம் என்றால் ஒரு முயல் வடிவத்தில் இருக்கிறதே அது ஒரு முயல் ஆகும். மரத்தின் வலது புறத்தில் ஒரு முயல் இருக்கிறது. இன்னொரு முயல் மரத்தின் இடது புறத்தின் அடிப்பகுதியில் இருக்கிறது. இப்போது எல்லோரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்போது தெரியவில்லையே என்பவர்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விளக்கமாக காட்டப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications