அதி புத்திசாலிகள் கண்ணுக்குதான் தெரியும்.. படத்தில் ஒளிந்திருக்கும் முயல் குட்டிகள்.. கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் 8 முயல் குட்டிகள் மறைந்து இருக்கின்றன. 12 செகண்டிற்குள் குறிப்பிட்ட 8 முயல் குட்டிகளையும் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லி தான்.
ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் பார்க்கும் நம் கண்களை குழப்பமடைய செய்து மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இருக்கும். கானல் நீர் போல், இருக்கும் ஆனா இருக்காது.. அதாவது முதலில் பார்க்கும் போது ஒரு தோற்றத்தையும் பின்னர் உற்று கூர்ந்து பார்த்தால் ஒரு தோற்றத்தையும் காண்பிக்கும். இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

ஓய்வு நேரத்தில் பலருக்கும் பயனுள்ளதாக இருப்பதனால் பலரும் இந்த ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களை பார்த்து அதற்கு விடையை கண்டுபிடிக்க முயன்று வருகின்றன. அந்த வகையில் இன்று இணையத்தில் பரவும் ஓர் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் 8 முயல் குட்டிகள் மறைந்து இருக்கின்றன. அந்த முயல் குட்டிகள் எங்கெங்கு உள்ளன என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.
கொடுக்கப்பட்ட படத்தில் ஒருவர் நின்றுகொண்டு இருக்கிறார். அவருக்கு பின்னே மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது போல் இருக்கிறது. இதில் தான் 8 முயல் குட்டிகளும் ஆங்காங்கே மறைந்து இருக்கின்றன. 12 செகண்ட் டைம். குறிப்பிட்ட 12 செகண்டிற்குள் 8 முயல் குட்டிகளையும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் கில்லி தான். அதிபுத்திசாலி, அதிக கவனிப்புதிறன், அறிவாற்றலை கொண்டவர்களாக இருப்பீர்கள்.
எனினும், 12 செகண்டில் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்களா நீங்கள்.. கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு நன்கு படத்தை உற்று கவனித்தால் படத்தில் முயல் குட்டிகள் எங்கெங்கு இருக்கிறது என்று தெரியும். ஒருசில முயல்குட்டிகளை கண்டுபிடித்துவிட்டோம்.. ஏனையவற்றை தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களும் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். அப்போதும் 8 முயல் குட்டிகள் எங்கே இருக்கின்றன என தெரியவில்லை என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 8 முயல் குட்டிகளும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளன. பார்த்து தெரிந்துகொள்ளலாம். ரொம்பவும் சவால் மிக்க இந்த படத்தில் 10 பேரில் ஒருவரே சரியாக 8 முயல்கள் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

எனவே நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். இந்த புகைப்படங்களில் மறைந்திருப்பதை கண்டுபிடிப்பதை வைத்து, ஒருவரின் கேரக்டரை கண்டுபிடித்து விடலாம் என்று சில ஆய்வுகள் நிரூபித்து இருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட இது, ஜாலியான பொழுது போக்கு விஷயமே என்பதும் சில நிபுணர்களின் வாதமாக இருக்கிறது..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications