உங்கள் கண்கள் ஷார்ப்பா? காட்டில் பதுங்கி இருக்கும் "குரங்கு.." 9 செகண்ட் டைம்.. கண்டுபிடிச்சா கில்லி
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குரங்கு ஒன்று ஒளிந்து மறைந்து இருக்கிறது. உங்களால் அந்த குரங்கை 9 செகண்டிற்குள் கண்டுபிடிக்க முடிகிறதா என்று செக் செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன. பொழுதுபொக்கு மட்டுமின்றி சவால் நிறைந்ததாகவும் இந்த படம் இருப்பதால், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. வன விலங்கு சரணலாயத்தில் உள்ள விலங்குகளை வேடிக்கை பார்க்க ஒரு குடும்பம் வந்துள்ளது. Zoo-வில் உள்ள ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளை ஆசையுடம் குழந்தைகள் மற்றும் பெற்றோர் பார்வையிட்டு வருகிறார்கள். தங்கள் செல்போனிலும் படம் பிடித்து கொண்டு இருக்கிறார்கள்.
நம்மை பார்க்க சுற்றுலா பயணிகள் கூட்டம் வருகை தருவதை அறிந்ததும், அவர்களின் கண்ணில் சிக்க கூடாது என்று நினைத்த குரங்கு ஓடி ஒளிந்து கொள்கிறது. அந்த குரங்கு எங்கு மறைந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 9 செகண்ட் தான் டைம்.. 9 செகண்டில் குரங்கு எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்தால் நீங்கள் உண்மையாகவே கில்லிதான்..
இந்த படத்தில் குரங்கு எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க பலரும் படாத பாடு பட்டு இருக்கிறார்கள்.. எனவே இந்த படத்தில் உள்ள விடையை முடிந்தால் 9 செகண்டில் கண்டுப்டிங்க.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1,2,3,....9...ஒகே நேரம் முடிந்தது.
படத்தில் குரங்கு எங்கே மறைந்து இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.. கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. 9 செகண்டிற்கு 18 செகண்ட் ஆச்சு.. இன்னும் குரங்கை கண்டுபிடிக்க முடியலன்னு சொல்பவரா நீங்கள்... உங்களுக்காக சில டிப்ஸ் கொடுக்கிறோம்.. படத்தை நன்கு ஜூம் செய்து பாருங்கள்..
குரங்கு மரத்தில் தான் இருக்கும் என நினைத்து பின்பக்கம் பச்சையாக இருக்கும் இடத்தில் தேடிக்கொண்டு இருந்தால் 9 செக்கண்ட் இல்லை..9 நிமிடம் ஆனாலும் உங்களால் விடையை கண்டுபிடிக்க முடியாது.. குரங்கு ஒட்டகசிவிங்கி பக்கத்திலேயே ஒளிந்து இருக்கிறது. எனவே அங்கேயே ஃபோகஸ் பண்ணுங்க.. இப்போதும் பலருக்கும் குரங்கு இருக்கும் இடம் தெரிந்து இருக்கும் என கருதுகிறோம்..
இன்னும் தெரியவில்லை என்றால் படத்தில் குரங்கு இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதை வைத்து கண்டுபிடித்து விடலாம். ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. இதனால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.













Click it and Unblock the Notifications