உங்கள் கண்களுக்கு ஒரு டெஸ்ட்.. "8"க்குள் பதுங்கியிருக்கும் "6.." கண்டுபிடித்தால் நீங்க கில்லிதான்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூசன் படத்தில் 8 என்ற எண்களுக்கு இடையில் ஒரே ஒரு 6 என்ற எண் பதுங்கி இருக்கிறது. இந்த 6 ஆம் எண் இருக்கும் இடத்தை 8 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லி தான்.
ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நம் கண்களையே ஏமாற்ற வைக்கும். கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும் என்ற பாடல் வரிக்கு கிட்டத்தட்ட அப்படியே பொருந்துவது ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்குதான்.. அதாவது இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும்.

இதன் காரணமாகவே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒளியியல் மாயை படம் என்கிறார்கள். அதுபோக இல்யூசன் படங்களில் சவால் மிக்கவையாக இருப்பதாலும் இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வரிசையாக 8 என்ற எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நூறுக்கும் மேற்பட்ட எட்டு எண்கள் அடங்கியுள்ள. இந்த படத்தில் ஒரே ஒரு 6 என்ற எண் மட்டும் இடம் பெற்றுள்ளது. எட்டுக்களுக்கு இடையே அந்த 6 எங்கே இருக்கிறது என்பதை கண்டறிவதுதான் உங்களுக்கான டாஸ்க்... அதுவும் வெறும் 8 செக்கண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. 1,2,3,... 8 நேரம் முடிந்தது.. 8 செகண்ட் தேவையில்லை இதை கண்டுபிடிக்க 6 செகண்டே போதும்.. அதற்குள் கண்டுபிடித்து விட்டோம் என நினைப்பவர் என்றால் நீங்கள் அதி புத்திசாலிதான். உங்கள் கவனிப்புத்திறனும் கண்பார்வையும் செம ஷார்ப்பாக உள்ளது. படத்தை எல்லா கோணத்திலும் பார்த்து விட்டேன்.. ஆனால் 6 எங்கு இருக்கிறது என்றே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என படத்தையே முறைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களா....
கவலையை விடுங்கள்...சின்ன ஐடியா தருகிறோம்.. அதை வைத்து முயற்சித்து பாருங்கள்.. படத்தை பார்த்ததும் இடது பக்கம் தான் பெரும்பாலானோர் பார்ப்பார்கள்.. ஆனால், 6 அங்கே இல்லை.. எனவே அந்த பக்கம் தேடுவதை விட்டு விடுங்கள்.. இன்னும் ஒரு எளிதான டிப்ஸ் என்றால்.. படத்தின் வலது பக்கத்தில் பாருங்கள்.. அங்கேதான் 6 மறைந்து உள்ளது...
இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். இன்னமும் தெரியவில்லை என நினைப்பவர்களுக்கு படத்தில் விடை எங்கே உள்ளது என்பது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.













Click it and Unblock the Notifications