உங்களுக்கு ஒரு சவால்! படத்தில் மறைந்து இருக்கும் பெண் எங்கே? 10 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உள்ளனர். இவர்கள் இருவரையும் தவிர மேலும் ஒரு பெண்ணின் உருவம் இந்த படத்தில் உள்ளது. ஆணின் உருவம் எளிதாக தெரிந்தாலும் பெண் உருவம் மறைந்துள்ளது. அதை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. 10 செகண்டில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் சிறந்த பொழுது போக்காக நெட்டிசன்கள் இடையே உள்ளது. பொதுவாக இந்த இல்யூஷன் படங்கள் புதிர் மிக்கவையாக இருக்கும். நமது கண்களையே நம்மை குழப்பி ஏமாற்ற வைத்துவிடும். ஒருவரின் கவனிப்புத்திறன், சிந்தனை ஆற்றல் ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கும் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் டிரெண்ட் ஆகிறது.

optical illusion offbeat trend

சரி அதை விடுங்க... இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெண் ஒருவர் மறைந்து இருக்கிறார். அதை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டெஸ்ட்.. என்ன சவாலுக்கு ரெடியா? படத்தை நன்கு உற்று பாருங்கள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஒரு வரைபடத்தில் நிற்கும் ஜோடியாக வந்து இருக்கும் நபர் எதையோ தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறார். சுற்றிலும் மரங்கள் நிறைந்து பசுமையாக காட்சியளிக்கிறது.

வனப்பகுதிக்குள் யாரையோ தேடுவது போல இந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே இருப்பது போல தெரிந்தாலும் நன்கு கவனித்தால் இன்னொரு பெண் உருவமும் மறைந்து இருக்கிறது. இந்த படத்திற்கு 99 சதவீதம் பேரால் விடையை கண்டுபிடிக்க சரியாக முடியவில்லை. அதாவது நூற்றில் ஒருவர் மட்டுமே சரியாக 10 செகண்டில் விடையை கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.

விடையை கண்டுபிடிக்க ஆரம்பியுங்கள்... உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1,2,3...10. ஓகே டைம் முடிந்தது. இந்த படத்தில் மறைந்து இருக்கும் பெண்ணின் உருவத்தை கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கில்லாடிதான். உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. சரி கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்கள் ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம்.

படத்தின் வலதுப்பக்கம் இரண்டு மரங்களையும் உற்று பாருங்கள்.. இப்போது பெண்ணின் உருவம் பலருக்கும் தெரிந்து இருக்கும் என நினைக்கிறோம்.. இப்பவும் தெரியவில்லை என நினைப்பவர்களுக்கு படத்திற்கான விடை இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.. அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்..

அட இவ்வளவுதான.. இதை கவனிக்க தவறிவிட்டோமே என விடையை கண்டுபிடிக்காதவர்கள் நினைப்பது புரிகிறது. இல்யூஷன் படங்களை பொறுத்தவரை, அடிக்கடி விடையை கண்டுபிடித்து வருபவர்கள் எளிதில் ஒரு நொடியில் கூட விடையை கண்டுபிடிக்கும் வகையில்தான் இருக்கும்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+