Optical Illusion: இந்த படத்துல படம் எடுக்காத ஒரு பாம்பு இருக்கு! 3 செகன்ட்டில் கண்டுபிடியுங்கள்
சென்னை: ஒரு படம் இருக்கு அதுல பாம்பு எங்கே இருக்குனு 3 வினாடிகளில் கண்டுபிடித்து தாருங்கள் பார்ப்போம்.
மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிக்கல் இல்லூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம்.

இந்த படங்கள் நம்மை குழப்புவதோடு கவனிக்கும் ஆற்றலையும் சோதித்து பார்க்கும் வகையில் இருக்கிறது. இதை நாம் கண்டுபிடிப்பதை வைத்து நமது மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.
இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இது இருக்கிறது எனலாம்! உங்கள் புத்திசாலித்தனத்தை கண்டுபிடிக்க எளிமையான முறையாகும். பொதுவாக நமக்கு தேடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேட வேண்டும் என்றால் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.

இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை குழப்பி முழியை பிதுங்க வைக்கும். விடையை கண்டுபிடித்துவிட்டால் உங்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லாமல் போகும். அந்த அளவுக்கு காலரை தூக்கிவிட்டு கொள்வீர்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷனை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் ஜீனியஸ்.
இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் சவால்களை வழக்கமாக பயிற்சி செய்தால் அறிவாற்றல் திறன்கள் மற்றும் கூர்ந்து நோக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். ஒரு குப்பைபோல் ஒரு பகுதி இருக்கிறது. அதில் நிறைய கற்கள், பஞ்சுகள், மரத்துண்டுகள், கொட்டாங்குச்சிகள் உள்ளிட்டவை உள்ளன.

அந்த படத்தில் படம் எடுக்காமல் இருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் மாஸ்டர்! நீங்கள் கழுகு போல மிகவும் கூர்மையான பார்வையுடன் கண்டுபிடித்துவிட்டால் கில்லிதான். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள், லென்ஸ் வைத்து பாருங்கள். எல்லாமே உங்கள் சாமர்த்தியம்தான். எப்படியோ பார்த்து கண்டுபிடியுங்கள்.
என்ன இன்னும் தெரியவில்லையா? சரி நாங்களே சொல்லிவிடுகிறோம். இதோ பாருங்கள் பாம்பு இருக்கும் இடத்தை வட்டமிட்டு காட்டியுள்ளோம். என்ன இடத்தில் எல்லாம் நீங்கள் தேடினீர்கள்தானே! உங்களுக்கு கிடைக்கவில்லையா, இப்ப எப்புடி கிடைத்தது பாருங்கள். இதற்குத்தான் பொறுமை அவசியம், அதே நேரத்தில் வேகமும் அவசியம்தான்.!

-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications