IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
சென்னை: குகை மனிதருக்குள் ஒரு மனித உருவம் இருப்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். அதுவும் 13 வினாடிகளில் கண்டுபிடியுங்கள்.
அப்படி கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் பாஸ், கில்லாடி! என்ன இந்த சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா? ஓய்வு நேரத்தை அரட்டை அடித்து வெட்டி கதை பேசி வீணாக்குவதைவிட்டுவிட்டு தினமும் இது போல் ஏதாவது மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளை விளையாடினால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

அந்த நாளும் புத்துணர்ச்சியாக இருக்கும். புதிரை கண்டுபிடிக்கும் முன்பு ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. சுருக்கமாக சொல்ல போனால் திருப்பதியில் மொட்டை அடித்த உயரமான சிகப்பு நிற சர்ட் அணிந்தவரை கண்டுபிடிப்பது போன்றது. இது நடக்கிற காரியமா?
திருப்பதி என்றாலே மொட்டைதான். அதில் பெரும்பாலும் உயரமாகவும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சிவப்பு நிற சட்டையை அணியத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் போது எப்படி கண்டுபிடிப்பது. அது போல் மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி?
அது போல்தான் குழப்பங்கள் நிறைந்தது. கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.
நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. கடைசியில் விடை சொல்லும் போதுதான் அய்யோ இது கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதே என எண்ணுவோம். அப்படிப்பட்ட நிலையில் தற்போது நாங்கள் ஒரு படத்தை காட்டுகிறோம்.
இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் உளவியல், நரம்பியல், கலை, அன்றாட வாழ்க்கை உள்ளிட்டவைகளுக்கும் பயனளிக்கிறது. இது மனிதரின் பார்வைத் திறன், நினைவுத் திறன், முடிவுகளை எடுக்கும் திறன் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கிறது.
ஒரு படத்தில் குகை மனிதன் இருக்கிறார். அவருக்கு பின்னால் பறவை இருக்கிறது. அந்த மனிதர் ஒரு கடற்கரையில் நின்று கொண்டு தூரத்தில் வரும் எதையோ பார்க்கிறார். அவருக்குள் மற்றொரு மனிதனும் இருக்கிறார். அவரை வெறும் 13 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் மூளைக்கு ஒரு சவால் விடுகிறோம். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? படத்தை தலைகீழாக வைத்து பாருங்கள்! அந்த இன்னொரு மனிதனின் முகம் தெரியும்.

-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications