optical illusion: வனத்தில் மறைந்திருக்கும் ”பெண் தேவதை”! உங்க கண்களுக்கு சேலஞ்ச்.. முடிந்தால் 6 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் (optical illusion) படத்தில் அழகான பெண் தேவதை ஒருவர் மறைந்து இருக்கிறார். அந்த பெண் தேவதை எங்கே இருக்கிறார்? என்று கண்டுபிடிப்பதே தான் உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 6 வினாடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன, போட்டிக்கு ரெடியா?
ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் புதிர் படங்கள் நம் மூளையை கசக்கி பிழிய வைக்கக்கூடியது. இந்த இல்யூஷன் படங்கள் சவாலானது என்பது இணையத்தில் நெட்டிசன்கள் இடையே ஜாலியான புதிர் விளையாட்டாக உள்ளது. கேம்ஸ் விளையாடி போர் அடிக்கும் நேரத்தில், இப்படி இல்யூஷன், புதிர் படங்கள் கண்ணில் பட்டால், அவற்றுக்கு விடை கண்டுபிடித்து தங்கள் அறிவுத்திறனையும், புத்திக்கூர்மையையும் நெட்டிசன்கள் சோதித்து பார்த்து விடுகிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம்
குறிப்பிட்ட வினாடிக்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நெருக்கடி இருப்பதால், நன்றாக தெரிந்த புதிர்கள் கூட சில நேரம் காலைவரி விட்டுவிடும். இத்தகைய இல்யூஷன், புதிர் படங்களுக்கு விடையை கண்டுபிடித்த நெட்டிசன்கள், நமது நண்பரின் அறிவுத்திறனையும், ஐக்யூவையும் சோதித்து பார்ப்போம் என்று அவர்களுக்கும் அனுப்பி சவால் விடுகிறார்கள்.
இதனால், இந்த இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடிக்கின்றன. சரி, இங்கே விஷயத்திற்கு வருவோம். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தினை பார்க்கும் போது பிளாக் அண்ட் வைட்டில் காடு இருப்பது போல் தெரியும். மரங்கள், செடிகளுக்கு நடுவே ஒரு பறவை பறந்து வருவது போன்று உள்ளது. முதலில் பார்க்கும் போது அப்படித்தான் பலருக்கும் தெரியும். ஆனால் கொஞ்சம் உற்று பார்த்தீர்கள் என்றால் இதில் பெண் தேவதை இருப்பது தெரியும்.
பெண் தேவதை எங்கே இருக்கிறார்?
ஆம்... இந்த படத்தில் ஒரு பெண் தேவதை இருக்கிறார். அவர் எங்கே இருக்கிறார்? என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 6 வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன, போட்டிக்கு தயாரா? உங்களால் 6 வினாடிக்குள் விடையை கண்டுபிடிக்க முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 6. ஓகே, டைம் ஓவர்.
படத்தில் பெண் தேவதை இருக்கும் இடம் தெரிந்ததா? மிகவும் எளிதான புகைப்படம் என்பதால் இப்போதே 100க்கு 95 சதவீதம் பேர் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் படம் முழுக்க தேடிவிட்டு, அப்படி ஒன்றும் தெரியவில்லையே என சிலர் நினைப்பது புரிகிறது. அவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தில் தேடிப் பார்க்கவும்.
விடை இதுதான்
இப்போதும் விடை தெரியவில்லை என்றால் அவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது படத்தின் இடதுபுறத்தில் மரங்கள், செடிகள் மற்றும் ஒரு பறவை இருக்கிறது அல்லவா... அதற்கு நடுவில் மட்டும் கூர்ந்து பாருங்கள்... அதில் மட்டும் உற்று கவனித்தால் விடையை கண்டுபிடித்துவிடலாம். இப்போது 100க்கு 99 சதவீதம் பேர் கண்டுபிடித்திருப்பீர்கள்...

விடையை கண்டுபிடிக்காதவர்களுக்கு இங்கே மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பெண் தேவதை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம். முதலில் கண்டுபிடித்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications