உங்க கண்களுக்கு சேலஞ்ச்! படத்தில் மறைந்து இருக்கும் மான் எங்கே? 8 நொடி டைம்! முடிந்தால் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மான் ஒன்று மறைந்துள்ளது. அந்த மான் எங்கே உள்ளது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால்.. அதுவும் 8 வினாடிக்குள்.. குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையை கண்டுபிடித்து நீங்கள் ஜீனியஸ் என்பதை நிரூபியூங்கள் பார்க்கலாம்..
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் புதிர் படங்கள் மூளைக்கு வேலை வைக்க கூடியவை. நம் கண்களையே குழப்பி இல்லாதத்தை இருப்பது போலவும், இருப்பதை இல்லாததை காட்டக்கூடிய புதிர் படங்களையே ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் என்கிறோம். இதற்கு எடுத்துக்காட்டாக கானல் நீரை கூட சொல்லலாம்..

தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் இடையே இத்தகைய இல்யூஷன் படங்கள் அதிகம் டிரெண்ட் ஆகின்றன. நெட்டிசன்களுக்கு ஒய்வு நேரத்தில் நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த இல்யூஷன் படம் இருப்பதால் நெட்டிசன்கள் விரும்பி பகிர்கிறார்கள். விடையை கண்டுபிடித்து விட்டு தங்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கும் பகிர்வதை பார்க்க முடிகிறது.
அப்படித்தான் நெட்டிசன்களுக்கு சவால் அளிக்கும் வகையிலான ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் இல்யூஷன் படத்தை பாருங்கள்.. மலை மற்றும் மரங்கள் சூழ்ந்துள்ள கற்பனையான ஒரு வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ள இந்த படத்தில் ஒரு மான் ஒன்றும் உள்ளது. அது எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
அதுதான் உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 8 செகண்ட்தான் டைம்.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. படத்தை உற்று பாருங்கள்... மான் என்பதால் கண்டிப்பாக புல்வெளி பக்கம்தான் நிற்கும் என யூகித்து இருப்பீர்கள்.. நீங்கள் நினைத்ததும் சரிதான்.. மான் மறைந்து இருக்கும் இடம் புல்வெளிகளும் மரங்களும் நிறைந்த இடம்தான்.. அந்த கோணத்திலேயே விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.. எளிதில் கண்டுபிடித்து விடலாம்..
உங்களுக்கான 8 வினாடிகள் டைம் முடிந்தது. பலரும் விடையை சரியாக கண்டுபிடித்து இருக்கலாம். விடையை சரியாக கண்டுபிடித்து இருந்தால் உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. படத்தை 8 வினாடிக்கு 16 வினாடி வரை பார்த்துவிட்டேன்.. மான் மறைந்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லையே என நினைப்பவரா நீங்கள்.. உங்களுக்காக சில டிப்ஸ் தருகிறோம்..

படத்தில் இடது பக்கத்தில் விடையை தேட முயற்சிக்க வேண்டாம்.. இடது பக்கமே விடையே தேடிக்கொண்டு இருந்தால் 8 வினாடி இல்லை 8 நிமிடம் ஆனாலும் விடையே உங்களுக்கு தெரியாது.. படத்தில் வலது பக்கம் மரத்தை ஒட்டி நன்றாக பாருங்கள்... இப்போது பலருக்கும் விடை தெரிந்து இருக்க வாய்ப்பு உள்ளது. இப்போதும் விடையை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பவர்களுக்கு விடையை நாங்களே வட்டமிட்டு காட்டியுள்ளோம்...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications