"குரூப்ல டூப்.." படத்தில் பணக்காரர் போல் நடிக்கும் நபர் யார்? முடிந்தால் 6 செகண்டில் கண்டுபிடிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கடை ஒன்றின் பில் கவுண்டரில் 4 பேர் நிற்கிறார்கள். இந்த 4 பேரில் ஒரே ஒரு நபர் மட்டும் பணக்காரர் போல வேடமிட்டு நிற்கிறார். அவர் யார் என்பதை 6 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு வேலை கொடுப்பவை. ஓய்வு நேரத்தில் மூளையை சுறுசுறுப்பாக வைத்து இருக்க இது போன்ற இல்யூஷன் படங்கள் பெரிதும் கை கொடுக்கும் என பல ஆய்வுகளும் சொல்கின்றன. சவால் மிக்க இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் டிரெண்ட் ஆகின்றன.

optical illusion offbeat trend

குறிப்பிட்ட நேரத்தில் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால், நெட்டிசன்கள் படத்திற்கான விடையை கண்டுபிடித்து தங்களை ஜீனியஸ் என காட்ட ஆர்வம் காட்டுவார்கள். அதுமட்டும் இன்றி தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் அனுப்பி அவர்களின் அறிவுத்திறனையும் ஜாலியாக சோதித்து பார்க்கிறார்கள். இதனால், இணையத்தில் தற்போது எல்லாம் இந்த இல்யூஷன் படங்கள் ஏகத்துக்கும் பிரபலமாக உள்ளது. சரி இங்கே விஷயத்திற்கு வரலாம்..

இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் இல்யூஷன் படத்தில், கடை ஒன்றில் பில் செலுத்துவதற்காக கவுண்டரில் வரிசையாக 4 பேர் நிற்கிறார்கள். பார்ப்பதற்கு அனைவரும், பெரும் பணக்காரர்கள் போல உள்ளனர். ஆனால், இதில் ஒருவர் மட்டும் பணக்காரர் போல வேடமிட்டு உள்ளார். அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. அது எப்படி ஒருவரை பார்த்து பணக்காரரா? இல்லையா? என கண்டுபிடிக்க முடியும் என உங்கள் மனதில் கேள்வி எழலாம்.

அதில்தான் இந்த படத்திற்கான விடையே மறைந்து இருக்கிறது. படத்தில் உள்ள நான்கு பேரையும் உற்று கவனிக்க வேண்டும்.. அவர்கள் கையில் இருக்கும் பொருட்களையும் பார்த்தால், விடை ஈசியாக கிடைத்து விடும்.. என்ன சவாலுக்கு ரெடியா.. 6 செகண்டில் குரூப்ல டூப் யாரு என்பதை கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கான டைம் தொடங்கியது.. 1,2,...6 ஓகே டைம் ஓவர்..

உங்களில் பலரும் படத்தில் பணக்காரர் போல வேடமிட்டு இருப்பவர் யார் என்பதை கண்டுபிடித்து இருப்பீர்கள். அபப்டி கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் உண்மையாகவே ஜீனியஸ் தான். போட்டித்தேர்வுகளில் இதுபோன்ற புதிர் கணக்குகள் இருந்தால் நீங்கள் விடையை எளிதாக கண்டுபிடிக்க சான்ஸ் இருக்கிறது.. சரி அதெல்லாம் இருக்கட்டும். விடை என்னவென்று சொல்லவே இல்லையே என நீங்கள் நினைப்பது புரிகிறது.

இங்கே நிற்கும் நான்கு பேரில் நான்காவதாக (டி) நிற்கும் நபர்தான் பணக்காரர் போல வேடமிட்டு நிற்பவர். அது எப்படி ? என நீங்கள் நினைக்கலாம். அவர் கையில் வைத்து இருக்கும் லேப்டாப்பை பாருங்கள்.. அது ஆப்பிள் லேப்டாப் போல தோன்றினாலும் உண்மையில் அது ஆப்பிள் லேப்டாப் இல்லை.

அதன் லோகோவில் ஒரு மாம்பழம் இருக்கிறது. ஆப்பிளின் பிரத்யேக லோகோ இல்லை. எனவே, மார்க்கெட்டில் கம்மியான ஒரு டூப்ளிகேட் பொருளை வைத்து இருக்கும் நபரே பணக்காரர் போல வேடமிட்டு இருக்கிறார் என யூகித்துவிடலாம்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+