உங்க மூளைக்கு சேலஞ்ச்.. படத்தில் எத்தனை எண்கள் உள்ளன? 10 செகண்டில் விடையை சொல்லுங்க பார்க்கலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் (Optical illusion) புகைப்படத்தில் பேப்பரில் சில நம்பர்களை எழுதி 95 சதவீதம் பேரால் சரியான விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது படத்தில் மொத்தம் எத்தனை எண்கள் உள்ளன? என்று கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடப்பட்டுள்ளது. அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் சரியான விடையை சொல்ல முடிகின்றதா என முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் கண்களை ஏமாற்றக் கூடியது. ஒருவரது புத்திக்கூர்மை எப்படி இருக்கிறது என்பதை இந்த படங்களை வைத்து சொல்லிவிட முடியுமாம். இதானால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகியவற்றில் அதிகம் பகிரப்படுகின்றன. ரீல்ஸ்களை பார்த்தே போரடிக்கும் நேரத்தில் கண்ணில் படும் இத்தகைய புதிர் படங்கள், நமது மூளைக்கு வேலை வைத்து புத்திக்கூர்மையை சோதிக்கும் விதமாக அமைந்து இருப்பதால் நெட்டிசன்கள் இத்தகைய இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்
பொதுவாக ஒருவரின் கவனிப்புத் திறன், புத்திக்கூர்மை உள்ளிட்டவற்றை கூட இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதன் மூலம் கணித்துவிட முடியும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. இல்யூஷன் படங்களை பொறுத்தவரை குறிப்பிட்ட வினாடிக்குள் விடையை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற சேலஞ்ச் இருப்பதால், எளிதாக தெரிந்த புதிர் கணக்குகள் கூட கடினமாக தெரிந்துவிடுகிறது.
பல போட்டித் தேர்வுகளில் கூட இதை உணர முடிந்து இருக்கும். புதிர் கணக்குகளுக்கு விடையை 5 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என சேலஞ்ச் இருந்தால் விடையை வேகமாக கண்டுபிடிக்க வேண்டும் என்ற அழுத்தத்திலேயே விடையை தவறாக கண்டுபிடித்துவிடுவார்கள். எனவே இந்த படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலானதாக உள்ளது.
படத்தில் எத்தனை எண்கள் உள்ளன?
விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்களும் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து அவர்களுக்கும் சவால் விடுக்கிறார்கள். இதனால், இந்த இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் ஆகின்றன. சரி இங்கே விஷயத்துக்கு வருவோம். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதிர் படத்தில் ஒரு தாளில், உங்கள் கண்களுக்கு சவால் என்ற வாசகத்துடன் இங்கே எத்தனை எண்கள் உள்ளன? என்று தான் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒரு எண்ணில் இருந்து மற்றொரு எண் தொடர்ச்சியாக இடைவெளி விடாமல் எழுதப்பட்டுள்ளது. அதன் அடியில் இதற்கான விடையை 95 சதவீதம் பேரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிதாக சொல்வது என்றால் மொத்தம் எத்தனை எண்கள்? என்பதே சவாலாகும். அதுவும் 10 செக்கன்டில் கண்டுபிடிக்க வேண்டும். படத்திற்கான விடையை கண்டுபிடிப்பதில் பலருக்கும் தோல்வியே மிஞ்சியிருக்கிறது.
சரியான விடை என்ன?
அதாவது 95 சதவீதம் பேரால் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை. வெறும் 5 சதவீதம் பேரே விடையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த ஐந்து சதவீதம் பேரில் நீங்கள் ஒருவரா? என தெரிந்துகொள்ளலாம். வாருங்கள். உங்களுக்கான டைம் தொடங்கியது.. 1, 2, 3, 4,...10 உங்களுக்கான டைம் முடிந்தது. சரியான விடை என்ன என்று கமெண்ட் செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications