உங்க கண்களுக்கு சேலஞ்ச்! படத்தில் மறைந்திருக்கும் நபர் எங்கே? 8 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க கிங்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நபர் ஒருவர் மறைந்து இருக்கிறார். அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். இதற்காக 8 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் விடையை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமாகியுள்ளன. கண்களை குழப்பி, மூளையை கசக்கிப் பிழியவைத்து சிறுவயதில் படித்த கணக்கு, இயற்பியல் பாடங்களை எல்லாம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தக்கூடிய இத்தகைய இல்யூஷன் மற்றும் புதிர் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலானதாக இருக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம்
விடையை கண்டுபிடிப்பது எளிது என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற சவால் இருப்பதால் சீக்கிரமாக விடையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என்ற அவசரத்தில் சரியான விடையை கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்பதால் இது ஒரு ஜாலியான புதிராக எடுத்துக்கொண்டு நெட்டிசன்கள் அதிகம் பகிர்வதை பார்க்க முடிகிறது.
இணையத்தில் ரீல்ஸ் பார்த்து சலிப்பு தட்டிவிட்டால், மூளைக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாக இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். விடையை கண்டுபிடித்துவிட்டால் தனது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் இந்த இல்யூஷன் படங்களை அனுப்பி அவர்களும் விரைவாக கண்டுபிடிக்கிறார்களா? என்று சோதித்து பார்க்கிறார்கள்.
மறைந்திருக்கும் நபர் எங்கே?
இதனால், இல்யூஷன் புதிர் படங்கள் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. சரி அதெல்லாம் இருக்கட்டும். இங்கே விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது ஆகும். படத்தில் ஒருவரது முகம் மறைந்திருக்கும்? அந்த முகம் எங்கே என கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும்.
கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்தோம் என்றால், சிறுவர், சிறுமியுடன் ஒருவர் நடந்து செல்வது போலவும், அந்த சிறுமி ஒரு பொம்மையை கையில் வைத்துக்கொண்டும் சில வார்த்தைகள் ஆங்காங்கே எழுதப்பட்டது உள்ள போன்றும் படமானது உள்ளது. இதில் நன்கு உற்று கவனித்தால் தான் இதில் இன்னொரு நபர் இருப்பது நம் கண்களுக்கு தெரியும்.
8 செகண்ட் தான் டைம்
அந்த மறைந்திருக்கும் முகம் எங்கே என கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. ..8. ஓக்கே டைம் ஓவர். விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.. குறிப்பிட்ட 8 செகண்டில் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் நீங்க கிரேட் தான்..
இப்போது பலரும் விடையை கண்டுபிடித்து இருக்கக்கூடும். மிகவும் எளிதாக விடையை கண்டுபிடிக்ககூடிய படம் என்றாலும் ஒரு சிலர் விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதையும் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு சின்ன டிப்ஸ் தருகிறோம். அதாவது படத்தினை பார்க்கும் கோணத்தை மாற்றி பாருங்கள். எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம்.
விடை இது தான்!
அடிக்கடி ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து வருபவர்கள் எளிதில் விடையை கண்டுபிடித்து விடுவார்கள். இப்போது 99 சதவீதம் பேர் விடையை சரியாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். மீதமுள்ள ஒரு சதவீதம் பேருக்காக இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

படத்தை சற்று தலைகீழாக திருப்பி பார்த்தால் போதும் சட்டென விடையை கண்டுபிடித்திட முடியும். ஒரு சிலர் எழுத்துக்களில் தேடி நேரத்தை வீணடித்து இருப்பார்கள். படம் முழுக்க சிரமப்பட்டு தேடாமல் ஸ்மார்டாக யோசித்து செயல்பட்டவர்கள் விடையை எளிதில் கண்டுபிடித்து இருப்பார்கள்.












Click it and Unblock the Notifications