உங்க கண்பார்வை செம ஷார்ப்பா.. மறைந்து இருக்கும் எலியை கண்டுபிடிங்க.. 10 செகண்ட் தான் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்து இருக்கும் எலியை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். 10 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் உங்கள் கண்பார்வை செம ஷார்ப் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. இதனால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பொழுதுபோக்கு நேரத்தில் சவால் மிக்க இல்யூஷன் படங்களை பார்ப்பதில் நெட்டிசன்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதோடு தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் திறனையும் ஜாலியாக சோதித்து பார்க்கிறார்கள். ஒளியியல் மாயை எனப்படும் இந்த படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படத்தில் பூனை ஒன்றிடம் இருந்து தப்பிக்க எலி மறைந்து இருக்கிறது. அதை கண்டுபிடிப்பதுதான் டாஸ்க். அதுவும் 10 செகண்டுகளில் கண்டுபிடிக்க வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை நன்கு பாருங்கள். ஒரு பூனை தனது வயிற்றுப்பசி ஆற்ற யாராவது சிக்க மாட்டர்களா என உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், தப்பித்தவறி மட்டும் கண்ணில் பட்டோம்... இன்னைக்கு சம்பவம்தான் என பூனை கண்ணில் அகப்பட்டு விடாமல் அங்கேயே ஒரு எலி ஒன்று ஒளிந்து இருக்கிறது. அந்த எலி எங்கே இருக்கிறது என கண்டுபிடிச்சு பூனைக்கு ஹெல்ப் பண்ணுங்க...
உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.... 1,2,3,..... ஓகே உங்களுக்கான டைம் ஓவர்.. பலரும் கண்டுபிடிச்சிருப்பீங்க என நினைக்கிறோம். அப்படி கண்டுபிடிச்சிருந்திங்க என்றால் உங்கள் கண் பார்வை செம ஷார்ப் ஆக இருக்கிறது. கவனிப்புத்திறனும் அபராமாக உள்ளது. சரி.. கண்டுபிடிக்காதவங்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கிறோம். அதை வைத்து ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.

இந்த படத்தில் பூனை எங்கேயோ உற்று பார்க்கிறதே அங்கேதான் எலி ஒளிந்து இருக்கிறது என்று நினைத்து தேடினால் 10 நொடி இல்லை 10 நிமிடம் ஆனாலும் பூனையை கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் பூனை அங்கே இல்லை. படத்தின் இடது பக்கமாக தேடிப்பாருங்கள் எலி அங்கேதான் மறைந்து இருக்கிறது.
அட.. இதை கவனிக்காம விட்டுட்டோமே என நினைக்கிறீங்களா... இன்னும் கூட நமக்கு எலியை கண்டுபிடிக்கலன்னு நினைப்பவர்களுக்கு விடையை நாங்களே சொல்லிடுகிறோம். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் எலி வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications