உங்களுக்கு ஒரு சவால்.. படத்தில் ஜீரோ எங்கே இருக்கு.. 10 செகண்ட் தான் டைம்! முடிஞ்சா கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 'O' என்ற ஆங்கில எழுத்துக்களுக்கு மத்தியில் ஜீரோ என்ற எண் மறைந்து உள்ளது. அது எங்கே இருக்கு என்பதை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். அனைத்து எழுத்துக்களையும் ஆழ்ந்து பார்த்தாலே எளிதாக விடையை கண்டுபிடித்து விட முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பதை கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்லலாம். இத்தகைய கண்கட்டி வித்தை படங்கள் மூளைக்கு வேலை வைக்கக் கூடியவை. இத்தகைய படங்களில் விடைகள் நேரடியாக கொடுக்கப்பட்டு இருக்காது. படத்தை பல்வேறு கோணங்களில் பார்த்தால் மட்டுமே இந்த இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிக்க முடியும். மேலோட்டமாக பார்த்தால் படத்திற்கான விடை நம் கண்களுக்கு தெரியாது.

சரி, இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிசையாக 'ஓ' என்ற ஆங்கில வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மத்தியில், ஒரே ஒரு ஜீரோ என்ற எண் மறைந்து இருக்கிறது. அந்த ஜீரோ எண் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதிலும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக ஜீரோ மற்றும் 'O' என்ற ஆங்கில லெட்டருக்கும் இடையே அடிக்கடி குழப்பம் ஏற்படும்.
குறிப்பாக ஆன்லைனில் சில வெப்சைட்களில் லாக் இன் செய்வதற்கு முன்பாக CAPTCHA கேட்கும். உதாரணத்திற்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு சென்றால் ஐஆர்சிடிசி இணையதளத்தில் லாக் இன் செய்யும் போது இந்த கேப்சாவை நிரப்பினால் மட்டுமே லாக் இன் செய்ய முடியும். இந்த கேப்சாவில் சில நேரங்களில் ஜீரோவும், 'ஓ'வும் இடம் இடம்பெற்று விடும். இது 'ஓ' வா... இல்லை ஜீரோவா என கண்டுபிடிப்பதற்குள் சிலருக்கு தலை சுற்றி விடும்.
அதிலும் தட்கல் டிக்கெட் புக் செய்யும் நேரத்தில் இப்படியான ஒரு கேப்சா சிக்கியது என்றால் டென்ஷன் எகிறிவிடும்.. பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால் இந்த குழப்பம் யூசர்களுக்கு இருக்கும்... உண்மையில் இரண்டிற்கும் இடையே சின்னதாக ஒரு வித்தியாசம் இருக்கும்.. நன்கு உற்று பார்த்தால் தான் வேறுபாட்டை கண்டறிய முடியும்.. அப்படி இந்த படத்தில் உள்ள ஜீரோ எது என்னவென்று கண்டுபிடித்துவிடலாம்...
உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1, 2, 3, 4, .... 10. ஓகே டைம் முடிந்தது... படத்தில் 'ஜீரோ' இருக்கும் இடத்தை கண்டுபிடிச்சிட்டீங்களா? சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் கிரேட் தான்.. உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. விடையை கண்டுபிடிக்க முடியவில்லையே ஒரே குழப்பமாக இருக்குன்னு யோசிக்கிறீங்களா.. சின்னதா ஒரு டிப்ஸ் தருகிறோம்..
படத்தில் இரண்டாவது வரிசையில் தான் விடை இருக்கு.. எனவே அங்கே இருக்கும் 'ஓ'க்களை உற்று பாருங்கள்.. ஒரே ஒரு ஆங்கில எழுத்து மட்டும் அளவில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. அட இதை கவனிக்கலயே என நீங்கள் நினைப்பது புரிகிறது.. இப்போ கூட விடை தெரியாமல் யோசித்துக் கொண்டு இருக்கிறீர்களா... படத்திற்கான விடை இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications