ஆப்டிகல் இல்யூஷன்.. நீங்கள் வெளிப்படையானவரா? அல்லது அமைதியானவரா? படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
சென்னை: ஆப்டிகல் இல்யூஷன் பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். இரண்டு பொருள்படும் மாய புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் அதிகமாக பார்க்க முடியும் இதைதான் ஆப்டிகல் இல்யூஷன் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுபோன்ற புகைப்படங்களை கொண்டு ஒருவரின் ஆளுமை குறித்து அறிந்துக்கொள்ள முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனநல மருத்துவத்தில் பயன்படுத்தப்படும். இந்த படத்தை பார்ப்பதன் மூலம் முதலில் அது எந்த மாதிரி தெரிகிறது என்பதை பொறுத்து ஒருவர் எந்த மாதிரியான ஆளுமை திறன்களை கொண்டுள்ளார் என்பதை மருத்துவர்கள் கணிக்கிறார்கள். சில நேரங்களில் மனநல ஆலோசகர்கள் கூட இதனை பயன்படுத்தி ஒருவரின் ஆளுமையை அடையாளம் காண்கிறார்கள்.

இந்த வரிசையில் தற்போது மற்றொரு படம் ஒன்று சோஷியல் மீடியாக்களில் பரவலாக பரவி வருகிறது. நீல நிறத்தில் இருக்கும் இந்த படம் இரண்டு வகையான கட்சிகளை கொடுக்கிறது. அதை நீங்களே உற்றுப் பாருங்கள். அதன்பிறகு இந்த கட்டுரையை படிக்கத் தொடங்குங்கள்.
படத்தை பார்த்து விட்டீர்களா, அதில் ஒன்று அடர் வனமும், மரத்தின் வேர்களும் இருப்பதை போன்று தெரிகிறது. இரண்டாவதாக நீல நிறத்தில் உள்ள உதடு போன்று தெரிகிறது. இதில் நீங்கள் எதை முதலில் பார்க்கிறீர்களோ அதை வைத்து உங்களது ஆளுமையை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, முதலில் காடு போன்ற உருவத்தை நீங்கள் பார்த்திருந்தால், உங்களுடைய ஆளுமை மிகவும் ஈர்ப்பானது என்று அர்த்தம். உங்களுடைய நட்பும், பழக்கமும் அதிகமானோரை ஈர்க்கும். நம்ப முடியாத அளவுக்கு நீங்கள் வசீகரமானவராக இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களிடம் பழகவும், நட்பு கொள்ளவும் மக்கள் விரும்புகின்றனர். பெரும்பாலும் நீங்கள் பிரச்னைகளிலிருந்தும் மோதல்களிலிருந்தும் விலகியே இருக்க நினைப்பவர்களாக இருப்பீர்கள். அதே சமயம் நீங்கள் உங்கள் இலக்குகளுக்காக கடினமாக உழைக்கும் நபராகவும் இருப்பீர்கள் என்று ஆப்டிகல் இல்யூஷன் நிபுணரான மியா கூறியுள்ளார்.
இதுவே உங்கள் கண்களுக்கு முதிலில் உதடு தெரிந்தால் மிகவும் தயக்கமான, அடக்கமான ஆளுமையை கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதேபோல எளிதாக பழகும் திறனை கொண்டிருப்பீர்கள். இன்னும் விரிவாக சொல்வதெனில் நீங்கள் அமைதியான மற்றும் உள்முக சிந்தனை கொண்ட நபர். தாழ்வுமனப்பான்மை இருக்க கூடும், வெட்கப்படக்கூடும். போட்டியிடுவதையோ மற்றவர்களுக்கு முன் தன்னை பந்தாவாக காட்டி நிரூபிப்பதையோ விரும்பாதவர். முன்னால் சென்று நிற்க விரும்பாதவர். ஆனால் உங்கள் இலக்குகளை அடைய உங்களால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். அதேநேரம், இலக்குகளை சிறியதாகவே வைத்துக்கொள்ள விரும்புவீர்கள், என்று மியா கூறுகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications