பூனைக்கு குசும்பை பாருங்க! அவ்ளோ ஐஸ்கிரீமில் ஒளிஞ்சிகிட்டு இருக்கு! 7 செகண்டிதான் டைம்! ஹர்ரி அப்!
சென்னை: ஐஸ்கிரீமில் மறைந்திருக்கும் பூனையை வெறும் 7 செகண்டில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
கோன் ஐஸ்கிரீம்கள் நிறைய இருக்கின்றன. அதில் ஐஸ்கிரீமுக்கு பதிலாக பூனைக் குட்டியின் தலை இருக்கிறது. என்னாது ஐஸ்கிரீமில் பூனை தலையா என எண்ணாதீர்கள். விளையாட்டுக்காகத்தானே, நெருப்பு என்பதால் வாய் சுட்டுவிடாது. எனவே அந்த பூனைத் தலையை 7 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள்தான் அறிவுஜீவி.

ஏ! நான் ஆப்டிக்கல் இல்யூஷனுக்கு ஆன்சரை கண்டுபிடிச்சுட்டேனு பெருமையா காலரை தூக்கிவிட்டுச் சொல்லலாம். இது மூளைக்கு வேலை கொடுப்பதோடு ஒரு படத்தை நீங்கள் எந்த அளவுக்கு கவனித்தீர்கள்? உங்கள் கவனித்தல் திறன் என்பதை கண்டறிவதுதான்!
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. சுருக்கமாக சொல்ல போனால் திருப்பதியில் மொட்டை அடித்த உயரமான சிகப்பு நிற சர்ட் அணிந்தவரை கண்டுபிடிப்பது போன்றது. இது நடக்கிற காரியமா?
திருப்பதி என்றாலே மொட்டைதான். அதில் பெரும்பாலும் உயரமாகவும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சிவப்பு நிற சட்டையை அணியத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் போது எப்படி கண்டுபிடிப்பது. அது போல் மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி?
அது போல்தான் குழப்பங்கள் நிறைந்தது. கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.
நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. கடைசியில் விடை சொல்லும் போதுதான் அய்யோ இது கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதே என எண்ணுவோம். அப்படிப்பட்ட நிலையில் தற்போது நாங்கள் ஒரு படத்தை காட்டுகிறோம்.
அந்த படத்தில் நெருக்க நெருக்கமாக கோன் ஐஸ்கிரீம்கள் உள்ளன. அதில் மஞ்சள், பச்சை, வெள்ளை உள்ளிட்ட நிறங்கள் உள்ளன. சொல்ல போனால் ஒவ்வொரு சுவையிலும் ஐஸ்கிரீம் இருக்கிறது. அதில் ஐஸ்கிரீம் மீது ஒரு பூனைக் குட்டியின் தலை இருக்கிறது.

ஐஸ்கிரீமை பார்ப்பதற்கு நமக்கே எச்சில் ஊறுகிறது. பூனைக் குட்டிக்கு சொல்லவா வேண்டும்? சரி விஷயத்திற்கு வருவோம்! என்ன ஐஸ்கிரீமை கண்டுபிடித்து விட்டீர்களா? 1, 2, 3, 4, 5, 6, 7 நேரமாகிறது! என்ன இன்னமுமா கண்டுபிடிக்கவில்லை! இதோ விடையை நாங்கள் சொல்கிறோம்! கோன் ஐஸ்கிரீமில் ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமை கட்டி பிடித்துக் கொண்டு எப்படி போஸ் கொடுக்கிறது என்பதை பாருங்கள்.












Click it and Unblock the Notifications