ரோபோ படத்தில் வருவது போல்! நாய்கள் வரிசையில் ஒரே ஒரு பூனை ! 3 செகன்டில் சிட்டியாக மாறி கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த படத்தில் நிறைய நாய்கள் இருக்கும் நிலையில் அதில் ஒரு பூனை மட்டும் மறைந்திருக்கிறது அதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. சுருக்கமாக சொல்ல போனால் திருப்பதியில் மொட்டை அடித்த உயரமான சிகப்பு நிற சர்ட் அணிந்தவரை கண்டுபிடிப்பது போன்றது. இது நடக்கிற காரியமா?

Optical Illusion Find the cat in the picture in just 3 seconds

திருப்பதி என்றாலே மொட்டைதான். அதில் பெரும்பாலும் உயரமாகவும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சிவப்பு நிற சட்டையை அணியத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் போது எப்படி கண்டுபிடிப்பது. அது போல் மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி?

அது போல்தான் குழப்பங்கள் நிறைந்தது. கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.

நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. அப்படிப்பட்ட நிலையில் தற்போது நாங்கள் ஒரு படத்தை காட்டுகிறோம். அதில் நிறைய நாய்கள் வரிசையாக இருக்கின்றன.

அதில் ஒரு பூனை இருக்கிறது. அதை 3 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். ரெடியா 1, 2, ,3 என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறது. நல்ல ஷார்ப்பான பார்வை கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த பூனை இருக்கும் இடம் தெரியும். எப்படியோ பூனையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள்!

Optical Illusion Find the cat in the picture in just 3 seconds

அதாவது வரிசையாக நாய்கள் நிற்கின்றன. 6 காலம்களில் 4 வரிசைகளில் நாய்கள் நின்றுக் கொண்டிருக்கின்றன. அதில் கடைசி வரிசையில் 2ஆவது இடத்தில்தான் அந்த பூனை இருக்கிறது. என்ன இப்போதாவது நாங்கள் சொன்ன நேரத்திற்குள் கண்டுபிடித்தவர்களுக்கு அதிகபடியமான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது போன்ற கண் கட்டி வித்தைகளை தினமும் பயிற்சி பெற்று வந்தால் உங்கள் பார்வை திறனும் , ஐகியூ திறனும் அதிகரிக்கக் கூடும். ஆரம்பத்தில் கடினமாக இருக்கும், ஆனால் போக போக உங்களுக்கே ஆர்வம் அதிகரிக்கும். ரோபோ படத்தில் ரோபோக்கள் கூட்டத்தில் வசீகரனை சிட்டி கண்டுபிடிப்பது போல் நீங்களுக்கும் எளிதாக கண்டறியலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+