எங்க போச்சு அந்த “தவளை”.. இந்த ஓவியத்துலதான் எங்கேயோ ஒளிஞ்சிருக்கு.. நீங்க அறிவாளின்னா கண்டுபிடிங்க
சென்னை: இந்த செய்தியின் உள்ளே ஒரு ஆப்டிகல் இல்லியூசன் ஓவியம் இணைக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் தேடல் மற்றும் கவனிக்கும் ஆற்றலை அறிய உங்களுக்கு சில வினாடிகளை நிர்ணயித்து காணாமல்போன தவளையை கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்.
பல வகை ஓவியங்கள் இருந்தாலும் அதில் ஆப்டிகல் இல்லியூசன் ஓவியங்களுக்கு என ஒரு தனி வரவேற்பு இருந்து வருகிறது. உடலியல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த மாயைகள் ஆப்டிகல் இல்லியூசன்களில் ஒரு ரகம்.
இந்த ஆப்டிகல் இல்லியூசன் படங்களில் ஏதாவது ஒரு பொருள், உயிரினம் வேறொரு தோற்றத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும். இதனை கண்டறிய முயல்வதன் மூலம் சிந்தனை, தேடல் ஆற்றல் வளரும்.

ஆப்டிகல் இல்லியூசன் படங்கள்
இந்த ஆப்டிகல் இல்லியூசன் புகைப்படங்கள் உங்கள் மூளையை கசக்க வைக்கும். ஆழமாக கவர்ந்து இழுக்கும் புகைப்படங்கள், ஓவியங்களுக்குள் ஏதாவது ஒரு தகவல் இருந்தால் கொஞ்சம் ஸ்பெஷல்தானே. ஊடகங்களில் வெளியிடப்படும் பேசும் படங்கள் ஆப்டிகல் இல்லியூசனின் வெளிப்படையான முகம் எனலாம்.

சவாலான காரியம்
பேசும்படத்தின் மூலம் அது சொல்ல வரும் செய்தியை எளிதில் அறிந்துகொள்ள முடியும். ஆனால், ஆப்டிகல் இல்லியூசனில் அந்த தகவல் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும். அதை சாதாரண ஓவியமாக, புகைப்படமாக நாம் கடந்து செல்லாமல் அதில் ஒளிந்து இருக்கும் தோற்றத்தை கண்டுபிடிப்பதே சற்று சவாலான காரியம்.

புகைப்பட புதிர்
நாளிதழ்களில் வெளியாகும் 2 படங்களின் வித்தியாசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற புதிரும் இந்த ஆப்டிகல் இல்லியூசனின் ஒரு வகைதான். இந்த அனைத்து வகையான ஆப்டிகல் இல்லியூசன் படங்களின் நோக்கமும் புகைப்பட புதிர்களை கண்டுபிடிப்பதுதான். ஒருவரின் அறிவாற்றல் மற்றும் கவனிப்பு திறனை அறிந்துகொள்ளவதற்கான எளிய வழி.

மூளைக்கு புத்துணர்ச்சி
சில ஆப்டிகல் இல்லியூசன் படங்களை வைத்து ஒருவரின் குணத்தை கணக்கிட முடியும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். பல அர்த்தங்களை தரும் ஆப்டிகல் இல்லியூசன்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆப்டிகல் இல்லியூசன் படங்களை அதிகம் கவனித்து புதிர்களை கண்டறிவதன் மூலம் மூளை இயங்கும் திறன் அதிகரிப்பதுடன் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

உரையாடல்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக மக்களிடையே உரையாடல் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த ஆப்டிகல் இல்லியூசன் புகைப்படங்களை வைத்து தனி நபராக இல்லாமல் நண்பர்கள், குடும்பத்தோடு சேர்ந்து புதிர்களை கண்டுபிடிக்க முயற்சிப்பதன் மூலமாக நல்ல கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்படும்.

ஓவியம்
நாம் இதில் இணைத்து இருக்கும் Bright Side வெளியிட்டு இருக்கும் ஆப்டிகல் இல்லியூசன் படம் என்பது ஒரு ஓவியம். ஒருவரின் படுக்கை அறை காட்சி படமாக வறையப்பட்டு இருக்கிறது. அதில், ஒருவர் கரடி பொம்மையை கட்டியணைத்தபடி கட்டிலில் படுத்து இருக்கிறார். ஜன்னல் வழியாக நிலாவும், வானமும், சுவற்றில் 2 ஓவிய ஃபிரேம்களும் மாட்டப்பட்டு உள்ளன.

எதை கண்டுபிடிப்பது? (ஜூம் செய்யாத படத்தை இதில் இணைக்கவும்)
அங்கு மேசை விளக்கும், அட்டை பெட்டியில் பொம்மைகளும், பூந்தொட்டியும் பந்தும் இருக்கின்றன. கீழே ஒரு பொம்மையும், புத்தகம் விழுந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்களே... நாங்கள் எதை கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா? சற்று பொறுங்கள். இந்த பொறுமையும் உங்களுக்கு உதவும். இந்த ஓவியத்தில் ஒரு தவளை ஒளிந்துகொண்டு இருக்கிறது. அது எங்கே என்று கண்டுபிடிக்க முயற்சி செய்திடுங்கள்.

ரிசல்ட் (ஜூம் செய்த படத்தை இதில் இணைக்கவும்)
கட்டிலில் படுத்துக் கிடப்பவரின் தலைக்கு மேல், சுவற்றில் ஒரு ஓவிய பிரேம் மாட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. இயற்கை ஓவியமான அதில் மரத்துக்கு பின்னால் வரையப்பட்டு இருக்கும் புள்வெளி போன்ற ஓவியத்தின் தோற்றம் தவளை முகம்போல் வரையப்பட்டு உள்ளது. ஒரு தவளை மரத்திற்கு பின்னால் உங்களை எட்டிப்பார்ப்பதை பார்த்தீர்களா? இந்த பத்தியை படிக்காமல் முதல் பத்தியிலேயே கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications