உங்க கண்களுக்கு சேலஞ்ச்.. தவளைக்கு மத்தியில் "குதிரை" எங்கே இருக்கிறது? 7 செகண்டில் கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தவளை ஒன்று இருக்கிறது. ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் இந்த படத்தில் "குதிரை" ஒன்று மறைந்து இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியும். இந்த குதிரை எங்கே மறைந்து இருக்கிறது என்பதை 7 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் புதிர் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன், சிந்தனை திறன், ஐகியூ லெவல் உள்ளிட்டவற்றை சோதித்து பார்க்கும் விதமாக உள்ளது. இதனால், ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்கள் இத்தகைய படங்களை விரும்பி பகிர்கிறார்கள்.

optical illusion offbeat trend

ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கான விடையை கண்டுபிடிக்கும் திறனை வைத்து ஒருவரின் புத்திக் கூர்மையை ஓரளவு கண்டுபிடித்து விடலாம் என பல்வேறு ஆய்வுக்ளும் சொல்கின்றன. இதில் மறைந்து இருக்கும் விடைகள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதனால் பலரும் இந்த படங்களை பார்த்து குழம்பி விடுவார்கள். எனினும் சற்று கூர்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம்.

பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தாலும் எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் பிளாக் அண்ட் ஒயிட் படம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவளை ஒன்று உள்ளது. ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், இந்த படத்தில் ஒரு குதிரையும் இருக்கின்றதாம். அந்த குதிரை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.

அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். பலரும் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் தினறியிருக்கிறார்கள். எனவே உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று சோதித்து பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. ..7 ஒகே டைம் ஓவர். என்ன படத்தில் குதிரை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?.. கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.

optical illusion offbeat trend

நீங்க இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையை கண்டுபிடிப்பதில் கில்லி தான். ஆனால் எவ்வளவு தேடியும் குதிரை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லையா? ஒன்றும் கவலைப்பட வேண்டும். மீண்டும் ஒரு முறை படத்தை பாருங்கள். படத்தின் வலதுபுறம், இடதுபுறம் அல்லது தவளையின் உடம்பில் எங்கோ குட்டியாக இருக்கும் என்று தேடினால் கண்டுபிடிக்க முடியாது.

அதை தவிர்த்து பாருங்கள். அப்படியும் தெரியவில்லையே என்று சொல்கிறவர்களுக்கு இங்கே ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம். இப்போது கண்டுபிடித்துவிடலாம். அதாவது படத்தை நீங்கள் பார்க்கும் கோணத்தை மாற்றி பாருங்கள். படத்தை வலது புறமாகவோ அல்லது இடதுபுறமாகவோ திருப்பி பாருங்கள். அட ஆமா.. என நீங்கள் சொல்வது புரிகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் விடை காண்பிக்கப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+