படத்தில் எத்தனை '9’ எண்கள் உள்ளன.. 100-ல் 10 பேரே சரியாக சொல்லியிருக்காங்க.. உங்களால் முடியுமா?
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 9 என்ற எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் கேள்வி என்னவென்றால், மொத்தம் எத்தனை '9' என்ற எண்கள் உள்ளன என கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 100க்கு 10 பேரே சரியான விடையை சொல்லியிருக்கிறார்கள். உங்களால் சரியான விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று சொல்லுங்கள்..
ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக நெட்டிசன்கள் மத்தியில் உள்ளது. கணக்கு புதிர்கள், படத்தில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பது என சிறு வயதில் படித்த புதிர்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த இல்யூஷன் படங்கள் உள்ளது எனலாம்.

இந்த புதிர் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலானது என்பதால் விடையை கண்டுபிடித்துவிட்டு தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து முடிந்தால் விடையை கண்டுபிடி பார்க்கலாம் என்று சவால் விடுப்பதை காணமுடியும். இப்படியாக நெட்டிசன்களுக்கு நல்ல பொழுதுபோக்கு தீனியாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன.
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சற்று வித்தியாசமானது. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் வரிசையாக எண்கள் எழுதப்பட்டுள்ளன. 0, 1, 2, 3, 4, 5, என 9 வரை எண்கள் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை நன்றாக உற்று பாருங்கள். இதில் மொத்தம் எத்தனை 9 எண்கள் உள்ளன என கண்டுபிடிக்க வேண்டும்.
முதலில் பார்க்கும் போது இது ஈசியானதாக இருக்கலாம். ஆனால் சரியான விடையை 10 சதவீதம் பேரே சொல்லியிருக்கிறார்கள். 90 சதவீதம் பேர் தவறான விடையை தான் சொல்லியிருக்கிறார்கள். பார்ப்பதற்கு ஈசியான இமேஜ் போல இருந்தாலும் இது உண்மையில் ரொம்பவே கஷ்டமானது.
உங்களின் கவனிப்புத்திறன், பொறுமை ஆகியவற்றை சோதித்து பார்க்கும் வகையில், இந்த இமேஜ் உள்ளது. இந்த படத்தில் சரியாக எத்தனை 9 எண்கள் உள்ளன என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள். அதுவும் வெறும் 10 செகண்டதான் டைம். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1, 2, 3, 4....10 உங்களுக்கான டைம் முடிந்துவிட்டது. விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் உண்மையிலேயே ஷார்ப்தான்.
போட்டி தேர்வுகளில் எல்லாம் அடித்து தூள் கிளப்பி விட சான்ஸ் இருக்கிறது. விடையை கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் படத்தை உற்றுப்பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் கூடுதலாக ஒரு 5 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள். தற்போது விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். விடையை கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ் தருகிறோம்.
மொத்த படத்தையும் பார்க்காமல் படத்தை மேலிருந்து ஒவ்வொரு எண்ணாக கவனித்து பாருங்கள். தற்போது குழப்பம் இல்லாமல் எளிதாக பார்க்க முடியும். சரியான விடையை தற்போது கண்டுபிடித்து இருக்க வாய்ப்பு உள்ளது. விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்ட்டில் பதிவிடுங்கள்.. யார் முதலில் விடையை சரியாக சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications