படத்தில் எத்தனை புள்ளிகள் உள்ளன? 90 % பேர் தப்பாதான் சொல்லியிருக்காங்க! முடிந்தால் கண்டுபிடிங்க!
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு சிறிய நோட்டு புத்தகத்தில், கையால் எழுதப்பட்ட வார்த்தைகள் உள்ளன. இதில் மொத்தம் எத்தனை டாட்கள் (புள்ளிகள்) உள்ளன? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான டாஸ்க். அதிலும் 10 செகண்டில் விடையை கண்டுபிடிக்க வேண்டும். இந்த படத்திற்கான விடையை 90 சதவீத பேர் மட்டுமே சரியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே உங்களால் முடியுமா என முயற்சி செய்து பாருங்கள்.
கண்களுக்கு சவால் அளித்து மூளைக்கு வேலை வைக்கும் புதிர் படங்களை ஆப்டிகல் இல்யூஷன் எனலாம். இருப்பதை இல்லாதது போலவும், இல்லாததை இருப்பது போலவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் காட்டும். அதாவது, இதில் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டும் என புதிர் போடப்பட்டு இருந்தால் அதை அந்த இல்யூஷன் இமேஜில் மேலோட்டமாக பார்த்தால் தெரியாது.

ஆழ்ந்து தேடினால் மட்டுமே விடை கண்ணுக்கு புலப்படும். அதிலும் குறிப்பிட்ட செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் விடையை கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும். இத்தகைய சவால் மிக்க இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்படுகிறது. பலரும் தங்கள் கண்டுபிடித்த விடையை நமது நண்பராலும் கண்டுபிடிக்க முடியுமா என கண்டறியும் ஆர்வத்தில் அவர்களுக்கு பகிர்வார்கள்.
நான் கண்டுபிடித்துவிட்டேன்.. உன்னால் கண்டுபிடிக்க முடியுமா? என சவால் விட்டு பார்க்கிறார்கள். இதனால், இந்த இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடிக்கின்றன. சரி.. இன்று நாம் பார்க்க இருக்கிற ஆப்டிகல் இல்யூஷன் படம் கொஞ்சம் வித்தியாசமானது. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிற படத்தை நன்றாக உற்று பாருங்கள். ஒரு சிறிய நோட்டு புத்தகத்தில், கையால் எழுதப்பட்ட வார்த்தைகள் உள்ளன.
இதில் எத்தனை புள்ளிகள் உள்ளன? என்று கேட்கப்பட்டுள்ளது. அதன் கீழே சில புள்ளிகளும் உள்ளன. இது எல்லாம் ரொம்ப சிம்பிள். ஈசியாக விடையை கண்டுபிடித்து விடுவோம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். இந்த இல்யூஷன் படத்தில் என்ன கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என்பதை சரியாக யூகித்து இருப்பீர்கள் என கருதுகிறோம். அதாவது இந்த படத்தில் எத்தனை புள்ளிகள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க். அதிலும் 10 செகண்டில் விடையை கண்டுபிடிக்க வேண்டும்.

ஜீனியஸ்களால் மட்டுமே இதை கண்டுபிடிக்க முடியும் என்று வேற சொல்லியிருக்கிறார்கள். எனவே உடனே இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சித்து பாருங்கள்.. என்ன சவாலுக்கு ரெடியா.. உங்களுக்கான டைம் தொடங்கியது.. 1,2,3... 10 ஓகே டைம் முடிந்தது. பலரும் விடையை சரியாக கண்டுபிடித்து இருக்கலாம். கண்டுபிடித்தவர்கள் ஜீனியஸ்கள்தான்.
இன்னும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லையே என.. முதலில் பார்க்கும் போது 10 டாட்கள் இருந்தது போல தெரிந்தது, இரண்டாவது எண்ணும் போது 12 வருகிறது என குழம்பிக் கொண்டு இருப்பவரா நீங்கள்... இரண்டுமே தவறான விடைதான்.. கொஞ்சம் கூடுதல் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. சரியான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்..
இப்போது சரியான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் பதிவிடுங்கள்.. யார் முதலில் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்..












Click it and Unblock the Notifications