ரொம்ப கஷ்டமான சவால்.. இந்த டி ஷர்ட்டில் எத்தனை ஓட்டைகள் உள்ளன.. டக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த செய்தியில் இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் எத்தனை ஓட்டைகள் இருக்கின்றன என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் பல கண்களை குழப்பும். முதலில் பார்க்கும் போது ஒரு மாதிரி இருக்கும்.. உற்று பார்த்தால் வேறு மாதிரி இருக்கும்.

இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை வைத்தே ஒருவரின் குணம் என்ன என்று எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

அதேபோல் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை வைத்தே உங்களின் அறிவுத்திறனை கண்டுபுடித்துவிட முடியும். அதாவது உங்களின் ஐக்யு எவ்வளவு இருக்கிறது என்று கண்டுபிடித்து விட முடியும். இப்போதெல்லாம் சில competetive தேர்வுகளில் கூட இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் இந்த செய்தியிலும் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் படம் உள்ளது. அந்த படம் கிழிந்த பனியன் !

கிழிந்த பனியன்

கிழிந்த பனியன்

இந்த கிழிந்த சட்டையில் மொத்தம் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது என்று எண்ணுங்கள் பார்க்கலாம். உங்களுக்கு 10 செகண்ட் மட்டுமே டைம். ரெடி.. செட்.. கோ.. ம்ம்ம் பார்த்துவிட்டீர்களா? எத்தனை இருக்கிறது 5 என்று சொல்கிறார்களா? நன்றாக பாருங்கள். இன்னொரு முறை எண்ணி பாருங்கள்.

துளை உள்ளது

துளை உள்ளது

கீழே நாம் பனியனை கழற்றும் பகுதியில் துளை இருக்கிறது அல்லவே. அதையும் சேர்த்து மொத்தம் 6 துளைகள் உங்களுக்கு தெரிகிறதா? சரி கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் இதில் 6 துளைகளை தான் கண்டுபிடிப்பார்கள். உங்களுக்கும் 6 துளைகள் தெரிந்தால் கவலை வேண்டாம். 90 சதவிகிதம் பேர் போலத்தான் நீங்களும். ஆனால் விடை அது அல்ல.

விடை என்ன?

விடை என்ன?

ஆனால் நடுவில் இருக்கும் இரண்டு கிழிசல் துளை வழியாக அந்த பக்கம் இருக்கும் சுவர் உங்களுக்கு தெரிகிறதா? அப்படி என்றால் பனியனில் அந்த பக்கமும் இரண்டு துளைகள் இருக்கிறது என்று தானே அர்த்தம். அதையும் சேர்த்தால் மொத்தம் 8 துளைகள் தெரியும். ஆம் இதில் மொத்தம் 8 துளைகள் உள்ளன. வெறும் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்த 8 துளைகளும் 10 நொடிக்குள் தெரியுமாம்! நீங்கள் 90 சதவிகிதத்தில் ஒருவரா.. இல்லை 10 சதவிகிதத்தில் ஒருவரா சொல்லுங்க!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+