நீங்கள் ரொம்ப படிப்ஸ்ஸா? அப்போ இந்த படத்தில் எத்தனை முக்கோணங்கள் இருக்கு! கவுண்ட் செய்யுங்கள்
சென்னை: இந்த படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். உங்கள் மூளை திறனுக்கு ஒரு சவால் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி குழப்பம் ஏற்படுமோ அப்படித்தான் இவைகளும்.

கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.
நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. தற்போது மூளைக்கு வேலை கொடுக்கும் பசில்களை பார்க்கலாம். அதாவது யாரோ ஒருவர் 8 லைன்களை கொண்டு ஒரு முக்கோணத்தை வரைந்துள்ளார்.
அதில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இந்த படத்தில் 24 முக்கோணங்கள் இருக்கிறது என சொன்னால் அதுவும் சரிதான். அந்த புகைப்படத்தின் கீழ் யாரோ ASKY என கையெழுத்து இட்டுள்ளார்கள். அதில் A என்ற எழுத்தை பார்க்கும் போது அதுவும் முக்கோணம் போல் காட்சி அளிக்கிறது.
எனவே அதையும் சேர்த்து கணக்கிட்டால் மொத்தம் 25 முக்கோணங்கள் இருக்கின்றன. இதுகுறித்து கணக்கில் நிபுணத்துவம் வாய்ந்த மார்டின் சில்வர்டென்ட் கூறியிருப்பதாவது: இந்த படத்தில் ஆஸ்கி என்ற கையெழுத்தில் உள்ள முக்கோணத்தையும் சேர்த்து 25 முக்கோணங்கள் உள்ளன.
முக்கோண வடிவில் உள்ள வார்த்தைகள் உள்பட முக்கோணங்கள் போல் இருக்கும் அனைத்தையும் நான் எண்ண வேண்டும். ஆனால் படத்தில் பல முக்கோணங்கள் உள்ளன. நான் எத்தனை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது. உண்மையை சொல்ல போனால் முக்கோணங்கள் ஏதும் இல்லை. ஆனால் தோராயமாக முக்கோணங்கள் என பார்த்தால் 25 உள்ளன என்றார்.
ஆனால் நெட்டிசன்களில் சிலர் 27 முக்கோணங்கள் இருப்பதாகவும் பெரிய முக்கோணங்களில் சிறியவை உள்ளதாகவும் கூறுகிறார்கள். எனவே எத்தனை முக்கோணங்கள் உள்ளது என்பதை நீங்களும் கூட்டி சொல்லுங்கள் பார்ப்போம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications