நீங்க ஜீனியசா.. ஒரு டெஸ்ட்.. இங்கே ஒரு பூனை ஒளிஞ்சிருக்கு.. 30 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒரு பூனை மறைந்துள்ளது. அதை 30 வினாடிக்குள் கண்டுபிடித்தால் உண்மையாகவே நீங்க ஒரு ஜீனியஸ்தான்... கண்டுபிடிக்க ரெடியா இருக்கீங்களா...

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது, இருக்கும் ஒன்றை இல்லாதது போலவும்.. இல்லாத ஒன்றை இருப்பது போலவும் காண்பிக்கும் படம் என்று சொல்லலாம். நம் கண்களே நம்மை ஏமாற்றும் வகையில் சில படங்கள் அமைந்து இருக்கும். சில படங்களோ.. மூளையை கசக்கி பிழிய வைத்து விடும். புதிரான இத்தகைய ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் இணையத்தில் தனி வரவேற்பு உள்ளது.

Optical Illusion; If you can find the hidden cat in the picture in 30 seconds, You are a genius

ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் பலவகையான படங்கள் உள்ளன. சில படங்களில் வெளிப்படையாக ஒரு காட்சி தென்படும். ஆனால் உற்று பார்த்தால்தான் அந்த படத்தில் உண்மையிலேயே படத்தில் என்ன உள்ளது என்பதை கண்டறிய முடியும். சில ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் நம் கவனிப்பு திறனையும் அறிவாற்றலையும் சோதித்து பார்த்து விடும்.

இணையத்தில் உலா வரும் புதிரான சில வினா விடைகள் போலவே ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கான விடையை கண்டறிய முயல்வதன் மூலம் சிந்தனை, தேடல் ஆற்றல் வளரும். இன்னும் எளிதாக சொல்லுவது என்றால் பார்த்த சில நொடிகளிலேயே நம்மால் படத்தில் மறைந்து இருப்பதனை கண்டுபிடிக்க முடியாது. மூளைக்கு வேலை கொடுத்து நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும்.

ஓய்வு நேரத்திலும் எப்போதும் இணையத்தில் உலா வரும் நெட்டிசன்களுக்கு நல்ல தீனியாக இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அமைந்து விடுகின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் பூக்கள் மற்றும் சில முட்செடிகளுக்கு நடுவே ஒரு செல்லப்பிராணி இருக்கிறது. அது என்னவென்று கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டெஸ்ட்...அதுவும் 10 வினாடிகளில் கண்டுபிடிப்பதுதான் ரியல் டெஸ்ட்..

சரி உங்களுக்கு ஒரு க்ளூவையும் கொடுத்து விடுகிறோம். இந்த பூக்களுக்கு மத்தியில் ஒளிந்து இருப்பது பூனை... இப்போது இருந்து உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.... கண்டுபிடிங்க பார்க்கலாம். ............. ஒகே டைம் ஓவர்... கண்டுபிடித்துவீட்டீர்களா.. இங்கே மறைந்து இருக்கும் பூனை உங்கள் கண்ணுக்கு தெரிந்துவிட்டால் உண்மையாகவே நீங்க ஒரு ஜீனியஸ் தான்.... உங்களையே நீங்க பாராட்டிக் கொள்ளலாம்.. ச்ச... நாம மிஸ் பண்ணிட்டோமே என கண்டுபிடிக்காதவர்கள் ஃபீல் பண்ண வேண்டியது இல்லை..

Optical Illusion; If you can find the hidden cat in the picture in 30 seconds, You are a genius

அது எங்கே இருக்கு விடையை இங்கேயே சொல்லி விடுகிறோம்... வெள்ளை நிற பூக்களாக இருப்பதால் உங்களால் அங்கே மறைந்து இருக்கும் பூனையை கண்டுபிடிக்கவில்லை.. படத்தின் வலது அடிப்பக்கத்தில் உற்று பாருங்கள்.. அங்கேதான் இந்த பூனை மறைந்து இருக்கிறது. இப்போதும் கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.. படத்தில் வட்டமிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

அதில் மறைந்து இருக்கும் பூனையை காணலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை பயிற்சி இருந்தால் எளிதாக கண்டுபிடித்து விடலாம். தொடர்ந்து இதுபோன இல்யூஷன் படங்களை பார்க்கும் போது அதில் உள்ள ட்ரிக்ஸ் தெரிந்து விடும் என்பதோடு, நமது கவனிப்புத்திறனும் கூடும். இதனால், எளிதாக விடையை கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+