நீங்க ஜீனியசா? காளான்களுக்கு நடுவே ஒரு எலி இருக்கு.. 15 வினாடி தான் டைம்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காளான்கள் உள்ளன. இந்த காளான்களுக்கு நடுவே ஒரு எலி ஒளிந்து கொண்டு இருக்கிறது. அதை 15 செகண்டில் கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் எனும் ஒளி மாயை படங்கள் இணையதளத்தில் தற்போது பிரபலம் ஆகி வருகின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகமாக இந்த இல்யூஷன் படங்கள் பகிரப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை பொதுவாக நமது மூளைக்கு வேலை வகையில் அமைந்து இருக்கும். அதாவது, கவனிப்புத்திறன், நாம் ஒரு படத்தை எந்த கோணத்தில் பார்க்கிறோம் என்பதை வைத்தே இதற்கான விடைகளை கண்டுபிடிக்க முடியும்.

சமூக வலைத்தளத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு சவாலாகவும் புதிர் போடுவதாகவும் இந்த படங்கள் இருக்கிறது என்பதால் இதை பலரும் ஆர்வமுடன் தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். அறிவுத்திறனுக்கு சவால் விடுக்கும் வகையில் இருப்பதால் பலரும் தங்கள் நண்பர்களுக்கு இதை ஒரு சவாலாகவே விடுத்து அனுப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்து விடையை கண்டுபிடிக்க வைக்கிறார்கள்.
மறைந்து இருக்கும் எலி: சில தேர்வுகளில் கூட இப்போது ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இடம் பெறுவதாக சொல்லப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை மேலோட்டமாக பார்த்தால் விடையை கண்டுபிடிக்க முடியாது. அதாவது, மேலோட்டமாக நாம் பார்த்தால் ஒரு விஷயம் கண்ணுக்கு தெரியும். அதுவே உற்று கவனித்தால்தான் படத்தில் ஒளிந்து இருக்கும் விடையை நம்மால் கண்டுபிடிக்க முடியும். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்..
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் சவாலில் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் ஒரு எலி மறைந்து இருக்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டும். படத்தில் உள்ள காளான்களுக்கு மத்தியில் தான் எலி மறைந்து இருக்கிறது. அதுவும் வெறும் 15 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் அதுதான் டாஸ்க்... என்ன ரெடியா... உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1,2.3............
எங்கே இருக்கிறது: அட இதெல்லாம் ஒரு டாஸ்க்கா என்று எலியை கண்டுபிடித்தவர்கள் நினைப்பது தெரிகிறது. 15 செகண்டிற்குள் கண்டுபிடித்து விட்டால் உண்மையாகவே நீங்கள் ஜீனியஸ்தான்.. உங்கள் ஐகியூ லெவல் வேற லெவலில் இருக்கிறது போங்க... சரி கண்டுபிடிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம்.. உங்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கிறோம்.. அதை வைத்து ஈசியாக கண்டுபிடித்து விடலாம்.

படத்தின் மேல் வரிசையில் உள்ள காளான்களுக்கு நடுவே எலி மறைந்து இருக்கவில்லை. அதனால், படத்தின் மேல் வரிசையை ஆராய்வதை விட்டு விடுங்கள்... எனவே படத்தின் கீழ் பகுதியில் இருக்குக் காளான்கள் வரிசையில் எலியை தேடுங்கள்.. அங்கேதான் மறைந்து இருக்கிறது. இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்..விடையை நாங்களே கொடுத்து விடுகிறோம். காளான்களுக்கு நடுவே எலி எங்கே உள்ளது என்பது படத்தில் வட்டமிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications