ஒரே ஒரு எண் மட்டும் 2 முறை இருக்கு.. 90% பேரால் விடையை கண்டுபிடிக்க முடியல.. உங்களால் முடியுமா?
சென்னை: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிசையாக எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்களில் ஒரே ஒரு எண்ணை தவிர வேறு அனைத்து எண்களும் ஒரே ஒரு முறை மட்டுமே இடம் பெற்றுள்ளன. இருமுறை இருக்கும் அந்த ஒரு எண் எது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான இன்றைய சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை நம் மூளைக்கு வேலை வைப்பவை. நம் கண்களை குழப்பி நம்மையே ஏமாற வைக்கும். இத்தகைய கண் கட்டி வித்தை படங்கள், பார்ப்பவர்களின் முளைக்கு வேலை வைப்பதோடு, பொழுதை போக்கும் விதமாக பயனுள்ள புதிர் விளையாட்டாகவும் உள்ளது.

ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்கள் இத்தகைய புதிர் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதோடு தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அனுப்பி வைத்து சவால் விடுக்கிறார்கள். இல்யூஷன் படங்களை பொறுத்தவரை ஒருவரின் கவனிப்புத்திறன், புத்தி கூர்மை உள்ளிட்டவற்றையும் சோதிக்கும் வகையில் இருப்பதால் ஒரு சில போட்டி தேர்வுகளில் கூட இதை ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் தற்போது இடம் பெறுவதாக சொல்கிறர்கள்.
புதிர் மிக்க இந்த படத்தில் விடையை கண்டுபிடிக்க குறிப்பிட்ட கால அளவும் கொடுக்கப்படுவதால் விடையை அதற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஒரு நெருக்கடி ஏற்படும். இந்த குறுகிய டைமிற்குள், நிதானமாக கவனித்து செயல்பட்டால் விடையை ஈசியாக கண்டுபிடித்து விடலாம்... சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வருவோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சற்று வித்தியாசமானது.
இந்த படத்தில் வரிசையாக எண்கள் பல்வேறு வண்ணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில் உள்ள எண்கள் அனைத்தும் வேறு வேறு. அதவது எந்த எண்ணும் ரிப்பீட் ஆக வில்லை. ஆனால் ஒரே ஒரு எண் மட்டும் இரு இடத்தில் ரிப்பீட் ஆகி உள்ளது. அந்த எண் எது? என்பதை கண்டுபிடிப்பது தான் உங்களுக்கான இன்றைய சவால். அதுவும் பத்தே செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
முடிந்தால் கண்டுபிடிங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது... டைம் ஸ்டார்ட் நவ் 1,2,.... 10 செகண்ட் ஆகிவிட்டது. யாரெல்லாம் கண்டுபிடித்தீர்கள் ... விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் விடையை பதிவு செய்யுங்கள்... குறிப்பிட்ட நேரத்தில் விடையை கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் உண்மையிலேயே நீங்கள் ஜீனியஸ் தான். உங்கள் கவனிப்பு திறன், புத்திக் கூர்மை அபாரமாக இருக்கிறது . உங்களுக்கு பாராட்டுக்கள்...
போட்டி தேர்வுகளில் இதுபோன்ற புதிர்கள் இடம் பெற்றால் சுளையாக மார்க் எடுத்து விடுவீர்கள்.. சரி கண்டுபிடிக்காதவர்கள் கூடுதலாக இந்த 10 செகண்ட் ரைம் எடுத்துக் கொள்ளுங்கள்.. இப்பொழுது படத்திற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.. இந்த படத்திற்கான விடை 32...

அதாவது 32 என்ற எண் மட்டுமே இரண்டு இடத்தில் உள்ளது. வேறு எந்த எண்ணும் ரிப்பீட் ஆகவில்லை. இரண்டு இடங்களில் 32 இருப்பதை கண்டியுங்கள் பார்க்கலாம்.. இப்பொழுதும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications