உங்க ஐக்யூ திறனுக்கு சேலஞ்ச்.. படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன? 7 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கின்ற ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் உள்ளன? என்று கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் ஐக்யூ திறனுக்கு சோதனை கொடுக்கும் வகையில் இந்த படமானது கொடுக்கப்பட்டிருக்கிறது. 7 விநாடியில் விடையை சரியாக உங்களால் சொல்ல முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள். சரியான நேரத்துக்குள் விடையை கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது அதிகம் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. ஓய்வு நேரத்தில் இணையத்தில் எதையாவது தேடும் நபர்களுக்கு இத்தகைய இல்யூஷன் படங்கள் தீனியாக அமைந்துவிடுகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
ஒருவரது கவனிப்புத் திறன், புத்திக்கூர்மையை அதிகரிக்க செய்யவும் இத்தகைய இல்யூஷன் படங்கள் பயன்படுகின்றன. ஒரு படத்தை முதலில் பார்த்ததும், அந்த படத்தில் என்னென்ன இருக்கின்றன? எவை எல்லாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்? என்பதனை தெளிந்து ஆராய, இத்தகைய புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு இல்யூஷன் படங்களும் பலவித பயிற்சியை அளிக்கின்றன.
எத்தனை விலங்குகள் உள்ளன?
ஆப்டிகல் புதிர் படங்கள் போட்டித் தேர்வுகளிலும் கூட கேட்கப்படுகின்றன. ஒருவரது ஐக்யூ திறனை கண்டுபிடிக்க இந்த சோதனை, அவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வைக்கப்படுகிறது. அந்த வகையில் தான், இன்று உங்களது ஐக்யூ திறனை சோதனை செய்யும் விதமாக ஒரு இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் உள்ளன என்பது தான் சவால்.
7 விநாடிக்குள் விடையை கண்டுபிடித்தால், உங்கள் ஐக்யூ திறன் வேற லெவலில் உள்ளது என்று சொல்லலாம். ஆம், படத்தை நன்றாக உற்று கவனியுங்கள். படத்தினை பார்த்ததும், சிங்கம், வரிக்குதிரை, பாண்டா கரடி, மான் என சில விலங்குகள் கண்ணுக்கு தெரிந்துவிடும். ஆனால், சரியாக துல்லியமாக மொத்தம் எத்தனை விலங்குகள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான சவால்.
சரியான விடை என்ன?
என்ன, போட்டிக்கு தயாரா? உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1.. 2.. 3... 7. ஓகே, டைம் ஓவர்! சரியான விடையை சொன்னவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் ஐக்யூ திறன் வேற லெவலில் உள்ளது. எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பக்குவமாக செயல்படுபவராக நீங்கள் இருப்பீர்கள்.
இன்னும் விடையை சரியாக கண்டுபிடிக்காதவர்கள், மீண்டும் ஒருமுறை கூட படத்தை பார்த்து பதில் சொல்லுங்கள். அதற்காக, "படத்தில் 10 விலங்குகள் உள்ளன", "15 விலங்குகள் உள்ளன", "16 உள்ளன" என்று சொன்னால், விடை தவறாகும். சரியான விடை என்ன என்று 7 விநாடிக்குள் கண்டுபிடித்து இருப்பவர்கள், கமெண்ட் செய்யுங்கள்.
இது தான் சரியான விடை

படத்திற்கான சரியான விடை 14 என்பதே. 14 என விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுக்கள். இல்லையே... குழப்பமாக இருக்கிறதே என்று சொல்பவர்கள், இங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் உள்ளன என்று வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications