உங்க ஐ க்யூ லெவலுக்கு டெஸ்ட்.. எந்த டீ கப் முதலில் நிரம்பும்? பத்தே செகண்ட தான் டைம்.. கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆபடிகல் இல்யூஷன் படத்தில் எந்த டீ கப் முதலில் நிரம்பும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நம் மூளைக்கு வேலை வைக்கும் இந்த படத்திற்கான விடையை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?..
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் மூளைக்கு வேலை வைப்பவை.. இல்யூஷன் படங்களில் விடைகள் கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருக்கும். பார்ப்பதற்கு மிகவும் ஈசியாக இருந்தாலும் விடை நேரடியாக கொடுக்கப்பட்டு இருக்காது. பல்வேறு கோணங்களில் படத்தை பார்த்தால்தான்.. மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிக்க முடியும்..

அந்த வகையில் நமது மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலான ஒரு ஆப்டிகல் படம் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படமானது சற்று வித்தியாசமானது. இந்த படத்தில் ஒரு டீ குவளை ஒன்றில் இருந்து வரிசையாக இருக்கும் கப்பில் டீ ஊற்றப்படுகிறது. இந்த கப்பில் இருந்து செல்லும் டீயானது எந்த கப்பிற்கு சென்று முதலில் நிரம்பும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் கப்களுக்கு நேரடியாக டீ ஊற்றப்படவில்லை. தொட்டி போன்ற ஒரு அமைப்பு கொடுக்கப்பட்டு, அதில் இருந்து ஒரு குழாய் வழியாக டீ கப்பிற்குள் செல்லும் விதமாக இந்த இல்யூஷன் படம் இருக்கிறது. எனவே தொட்டியில் விழும் தண்ணீர் நேரடியாக கப்பிற்கு செல்லாது. அதிலும் தொட்டியில் இருந்து கப்பிற்கு செல்லும் குழாய்களும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு குழாய் மட்டுமே ஓபனில் உள்ளது.
எனவே ஓபனாக இருக்கும் அந்த குழாய் வழியாகத்தான் கப்பிற்கு டீ செல்லும். அது எந்த கப் என்று கண்டுபிடியுங்கள்... 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்... உங்ளுக்கான டைம் ஸ்டார்ட்.. படத்தை நன்றாக உற்று பாருங்கள்.. ரொம்பவே ஈசியான ஒரு புதிர் படம்தான் இது..10 செகண்ட் ஆகிவிட்டது.. உங்களில் பலரும் விடையை சரியாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்..
விடையை கண்டுபிடிக்காதவர்கள் மீண்டும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள்.. சின்னதா ஒரு டிப்ஸ் தர்றோம். அதை வைத்து விடையை ஈசியாக கண்டுபிடிச்சிடலாம்.. படத்தின் இடது பக்கம் உள்ள கப்களுக்கு பாதை இல்லை எனவே அங்கே விடை இல்லை.. வலது பக்கத்தில் உள்ள இரண்டில் ஒன்றுக்குதான் டீ செல்லும்.. இப்போது உங்கள் போகசை அங்கே செலுத்துங்கள்..... கிட்டத்தட்ட அனைவருமே கண்டுபிடித்து விட்டீர்கள் என நினைக்கிறோம்.

விடையை கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்களே சொல்லிவிடுகிறோம். 5- ஆம் எண் கொண்ட கப்பிற்குதன் டீ முதலில் விழும்... ஏனெனில் இடது பக்கம் இருக்கும் கப்களுக்கு பாதை எதுவும் இல்லை. இடது பக்கத்தில் உள்ள மற்றொரு தொட்டி நிறைந்து அங்கு பாதை இல்லாததல் வலது பக்கமே டீ விழும்.. அங்கு பாதை இருக்கும் 5 ஆம் எண் கொண்ட கப்பிற்கே டீ விழும்.. எனவே இந்த படத்திற்கான விடை 5 ஆகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications